301. கவாடம் = கதவு.
302. கவி: = புத்திசாலி, முனிவன், சிந்தனையாளன், கவி வால்மீகி, சூரியன், பிரம்மா.
303. க ஷாயம் = துவர்ப்பு ருசி அல்லது மணம், சிவப்பு நிறம், மருந்து, பூச்சு, கோந்து, அழுக்கு, மந்தம்.
304. கஷ்டம் = கெட்ட காரியம், கடினம், சங்கடம், வேதனை, துன்பம், பீடை, பாவம்.
305. காங்க்ஷா = விருப்பம், ஆசை, ருசி.
306. காஞ்சனம் = பொன், பளபளப்பு, காந்தி, சொத்து, தாமரைத் தண்டின் நார்.
307. காத3ம்பரீ = கடம்ப புஷ்பங்களில் இருந்து செய்யப்படும் மது பானம், யானையின் மத ஜலம், சரஸ்வதி தேவி, பெண் குயில், ஒரு காவியத்தின் நாயகியின் பெயர்.
308. கானனம் = காடு, தோப்பு, வீடு, பிரம்மாவின் வாய்.
309. காந்த: = காதலன், கணவன், நேசிக்கப்படுபவன், சந்திரன், வசந்தகாலம், கார்த்திகேயனின் ஒரு பெயர்.
310. காந்தா = காதலி, மனைவி, எஜமானி, அழகி, பூமி.
311. காந்தி = வசீகரம், அழகு, ஒளி, விருப்பம், அலங்காரம், துர்கையின் ஒரு பெயர்.
312. காமஜித் = சிவன், முருகன்.
313. காயம் = உடல், அடிமரம், வீணையின் உடல் பகுதி, கூட்டம், மூலதனம், வீடு, குறி, சின்னம்.
314. காரணம் = ஹேது, ஆதாரம், உத்தேசம், உபகரணம், தகப்பன், தத்துவம், இந்திரியம், உடல்.
315. காராக்3ருஹம் = சிறைச்சாலை.
316. கார்பண்யம் = ஏழ்மை, கஞ்சத்தனம், தரித்திரம், அற்பத்தனம், கருணை.
317. கார்யம் = வேலை, தொழில், சடங்கு, நோக்கம், வழக்கு, உத்தேசம், அபிப்ராயம்.
318. காலகண்ட2: = மயில், ஊர்க்குருவி, சிவன்.
319. காலகூடம் = கொடிய விஷம்.
320. காலாக3ரு: = அகில், காரகில்.