3161. வேதஸ: = நாணல், பிரம்பு, கொடி, எலுமிச்சம் பழம்.
3162. வேதாள: = பூதம், பிசாசு, வேதாளம்.
3163. வேத்ரு: = அறிந்தவன், முனிவர்.
3164. வேத்ர: = வேத்ரம் = பிரம்பு, தடி.
3165. வேத3: = அறிவு, நான்கு வேதங்களில் ஒன்று.
3166. வேதி3: = வேதீ3 = யாக மேடை, முத்திரை மோதிரம், சரஸ்வதி, நிலப்பகுதி.
3167. வேத்3ய = அறியத் தக்க, மணம் புரியத் தக்க.
3168. வேத3ஸ் = பிரமன், விஷ்ணு, சிவன், அறிவாளி, சூர்யன்.
3169. வேபனம் = நடுக்கம்.
3170. வேலா: = காலம், வேலை, பருவம், அலை, வெள்ளம், எல்லை, அளவு, கடற்கரை
3171. வேச’: = வே ஷ: = உடை, வே ஷம், நுழைவு, நுழைதல், நுழை வாயில், வேசியின் வீடு.
3172. வேச்’யா = விலை மாது.
3173. வேஷித = சுற்றப்பட்ட, மூடப்பட்ட, சூழப்பட்ட, தடுத்து நிறுத்தப்பட்ட.
3174. வைகுண்ட2: = துளசிச் செடி, விஷ்ணு.
3175. வைகுண்ட2ம் = விஷ்ணு லோகம்.
3176. வைகரீ = பேச்சு, பேசுதல், பேச்சுத்திறன், தெளிவான உச்சரிப்பு.
3177. வைகு3ண்யம் = குற்றம், மாறுபாடு, குணமற்ற தன்மை, எதிரிடை.
3178. வைசித்ர்யம் = ஆச்சரியம், எதிர்பாராமல், பலவிதமானது.
3179. வைஜயந்தி = விஷ்ணுவின் மாலை, விருதுக்கொடி, முத்திரை, அடையாளம், மாலை, ஒரு அகராதி.
3180. வைதி3க = புனிதமான, வேத சம்பந்தமுள்ள.