158. வீர்யம் to வேதனம்

3141. வீர்யம் = பராக்கிரமம், வலிமை, ஆண்மை, சக்தி, திறன், திடத் தன்மை.

3142. வ்ருத்தம் = செய்தி, சமாசாரம், விஷயம், ஒழுக்கம், முறை, உருண்டை, வட்டம், விருத்தம், நிகழ்ச்சி, சரிதம்.

3143. வ்ருத்தி: = இருப்பு, வாழ்தல், இருத்தல், போக்கு, முறை, நிலை, நடத்தை, நிலைமை, தொழில், விரிவுரை, சுற்றளவு.

3144. வ்ருதா2 = இலாபமற்று, பொருளற்று, அவசியமிலாத, வீணான.

3145. வ்ருத்3த4 = வயது முதிர்ந்த, வளர்ச்சியடைந்த.

3146. வ்ருத்3த4: = கிழவன், முனிவர்.

3147. வ்ருத்3தா4 = கிழவி.

3148. வ்ருத்3தி4: = வளர்ச்சி, மலருதல், செழுமை, சொத்து, குவியல், குவிப்பு, இலாபம், வட்டி.

3149. வ்ருச்சிக: = தேள், விருச்சிக ராசி.

3150. வ்ருஷ்ண: = அண்டம்.

3151. வ்ருஷ: = வ்ருஷப4: = எருது, காளை, விருஷப ராசி, ஒரு வர்க்கத்தில் மேலானது, சிவபிரானுடைய வாஹனம், நந்தி.

3152. வ்ருஷத்4வஜ : = வ்ருஷபதி: = வ்ருஷப4த்4வஜ : = சிவனுடைய பெயர்கள்.

3153. வ்ருஷலீ = கன்னிப்பெண், மாதவிடாயில் உள்ளவள், சூத்திரனுடைய மனைவி.

3154. வ்ருஷாகபி: = விஷ்ணு, சிவன், சூரியன், அக்னி தேவன், இந்திரன்.

3155. வ்ருஷ்டி: = மழை.

3156. வ்ருஷ்ணி: = கிருஷ்ணனின் முன்னோர்களில் ஒருவர், கிருஷ்ணன், மேகம், செம்மறியாடு, ஒளிக்கிரணம், இந்திரன், அக்னி, காற்று.

3157. வேக3: = வேகம், மனவேகம், நடை, பிரவாஹம், வெள்ளம், ஓட்டம், வலிமை, சக்தி, காதல், அன்பு, வீரியம்.

3158. வேணி: = வேணீ = தலைப் பின்னல், ஓட்டம், நீரோட்டம்.

3159. வேணு: = புல்லாங்குழல், மூங்கில், நாணல்.

3160. வேதனம் = சம்பளம், கூலி, வாடகை, பிழைப்பு, தொழில்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *