157. விஸ்தார: to வீர:

3121. விஸ்தார: = பரவுதல், அகலம், பரந்த அமைப்பு, புதிய இலைகள் உள்ள கிளை, வட்டத்தின் விட்டம், விவரித்தல்.

3122. விஸ்தீர்ண: = விஸ்த்ருத = பரப்பப்பட்ட, அகலமான, விசாலமான, பெரிய.

3123. விஸ்போ2ட: = கட்டி, பரு, அம்மைநோய்.

3124. விஸ்மய: = ஆச்சரியம், கர்வம்.

3125. விஸ்மித = ஆச்சரியமடைந்த, கர்வம் அடைந்த.

3126. விஸ்மரணம் = விஸ்ம்ருதி: = மறத்தல், மறதி.

3127. விஹக3: = விஹங்க3: = பறவை, மேகம், அம்பு, சூரியன், சந்திரன்.

3128. விஹங்கம: = பறவை.

3129. விஹாயஸ் = ஆகாயம், விண்வெளி.

3130. விஹார: = அப்புறப்படுத்துதல், வெளியேற்றுதல், விளையாட்டு, கேளிக்கை, சிதறுதல், தோட்டம், பூங்கா, கோவில், ஆச்ரமம், பௌத்த மடம்.

3131. விஹித = தீர்மானிக்கப்பட்ட, நிர்மாணிக்கப்பட்ட, தயாரிக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, செய்யப்பட்ட, ஒழுங்கு படுத்தப்பட்ட.

3132. விஹீன = இல்லாத, இல்லாமல், இழிவான.

3133. விஹ்வல = பயந்த, நடுக்கமுற்ற, துக்கமடைந்த, கலக்கமடைந்த, அமைதியற்ற, இளகிய, நெகிழ்ந்த.

3134. விக்ஷேப: = எறிதல், அனுப்புதல், குழப்பம், பயம்.

3135. வீக்ஷணம் = வீக்ஷணா = பார்த்தல், பார்வை.

3136. வீக்ஷணம் = கண், கோள்களின் பார்வை.

3137. வீசி: = வீசீ = அலை, மகிழ்ச்சி, ஓய்வு, ஒளிக்கிரணம், கடல்.

3138. வீணா = வீணை, மின்னல்.

3139. வீதி2: = வீதீ = சாலை, தெரு, வரிசை, கடை, கடைவீதி, சந்தை.

3140. வீர: = போர் வீரன், வீரன், மகன், கணவன், வேள்வித்தீ.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *