3101. விசு’த்3த4 = சுத்தமான, தூய்மையான, களங்கமற்ற, பாபமற்ற.
3102. விசே’ஷ: = வித்தியாசம், தனிப்பட்ட குணம், அவயவம், விதம் ,வகை மென்மை, நெற்றியில் இடும் பொட்டு.
3103. விச்’வம் = எல்லா உலகமும், சுக்கு, விஷ்ணு.
3104. விச்வேச’: = விச்’வேச்’வர: = பரம்பொருள், சிவன்.
3105. விச்’வதஸ் = எல்லா இடத்திலும், எங்கும், எப்பக்கத்திலும்.
3106. விச்’வம்ப4ர: = பரம்பொருள், விஷ்ணு, சிவன்.
3107. விச்வாஸ: = நம்பிக்கை, ரஹசியம்.
3108. விஷம் = விஷம், தண்ணீர்.
3109. விஷம = சமமில்லாத, கடினமான, கஷ்டமான, துக்கம் தரும், பயங்கரமான, பருமனான, கெட்ட, எதிரிடையான, அயோக்கியத்தனமான.
3110. விஷய: = புலன்களுக்கு உரிய விஷயம், பொருள், வஸ்து, நிலம், ராஜ்ஜியம், நாடு, சிற்றின்பம்
3111. விஷாத3: = சோகம், துக்கம், சோர்வு, உத்சாஹமின்மை, ஆசையின்மை.
3112. விஷூசிகா = விஸூசிகா = காலரா, வந்தி.
3113. விஷ்கம்ப4: = தடை, தாழ்ப்பாள், தூண், கம்பம், மரம், பரப்பு, விஸ்தாரம், வட்டம்.
3114. விஷ்டா = மலம், வயிறு.
3115. விஸர்க3: = தள்ளல், விடுதல், எறிதல், போடுதல், காணிக்கை, தானம் செய்தல், விட்டு விடுதல், மலம் கழித்தல்,
” : ” என்னும் குறி.
3116. விஸர்ஜனம் = அனுப்புதல், கொடுத்தல், மலம் கழித்தல், விடுதல், வெளியேற்றல், ஆவாஹனம் செய்த தேவதையைத் திருப்பி அனுப்புதல்.
3117. விஸர்ப: = பரவுதல், நகருதல், தோலில் தோன்றும் படை நோய்.
3118. விஸ்ருத = பரவிய, சொல்லப்பட்ட, விஸ்தரிக்கப்பட, உச்சரிக்கப்பட்ட.
3119. விஸ்ருஷ்ட = உண்டான, வெளியாகிய, அனுப்பப்பட்ட, விடுபட்ட, தள்ளப்பட்ட, கொடுக்கப்பட்ட, எறியப்பட்ட, வெளியேற்றப்பட்ட.
3120. விஸ்தர: = பரவுதல், விவரணம், விஸ்தாரம், விரிவு, கூட்டம், அதிகம், படுக்கை, ஆசனம்.