3081. விலாஸ: = விளையாட்டு, ஆனந்தம், அழகு, பளபளப்பு.
3082. விலேப: = விலேபனம் = பூச்சு, மெழுகு, தைலம்.
3083. விலோசனம் = கண்.
3084. விவாத3: = தர்க்கம், விவாதம், வழக்கு, கட்டளை.
3085. விவாஸ: = விவாஸனம் = வெளியேற்றுதல், நாடு கடத்துதல்.
3086. விவரணம் = விரிவுரை, வெளிப்படுத்துதல், விவரித்தல்.
3087. விவர்த: = சுற்றுதல், சுழலுதல், உருமாறுதல், திரும்புதல்.
3088. விவஸ்வத் = சூரியன், அருணன், ஒரு மனுவின் பெயர்,
தெய்வம், எருக்கு இலை/ செடி.
3089. விவாஹா: = திருமணம்.
3090. விவிகத = பிரிக்கப்பட்ட, தனித் தனியாக்கப்பட்ட, வேறான, புனிதமான, குற்றமற்ற, சுத்தமான.
3091. விவித4 = பலவிதமான.
3092. விவேக: = பகுத்தறிவு, ஆராய்ந்து தீர்மானிக்கும் சக்தி.
3093. விவேசனம் = ஆராய்தல், பகுத்தறிதல், நிர்ணயித்தல்.
3094. விச்’ = நுழைய, அடைய, சேர, உட்கார.
3095. விச’த3 = சுத்தமான, தூய்மையான, தெளிவான, வெண்மையான, ஒளியுடன் கூடிய.
3096. விசா’க2: = முருகன், சிவன்.
3097. விசா’கா2 = ஒரு நட்சத்திரத்தின் பெயர்.
3098. விசா’ரத3 = புகழ் வாய்ந்த, கற்றறிந்த, கெட்டிக்கார, திறமை வாய்ந்த.
3099. விசா’ல: = பரந்த, பெரிய, புகழ் வாய்ந்த, அகலமான, விசாலமான.
3100. விசி’ஷ்ட = மேலான, அசாதாரணமான, லக்ஷணங்களுடன் கூடிய..