154. வியோக3: to விலக்ஷண

3061. வியோக3: = பிரிவு, இன்மை, நஷ்டம்.

3062. விரசித = எழுதப்பட்ட, இயற்றப்பட்ட, இழைக்கப்பட்ட, ஒழுங்கு படுத்தப்பட்ட, சரி செய்யப்பட்ட.

3063. விரக்தி: = பற்றற்ற நிலை, அதிருப்தி.

3064. விரதி: = ஓய்வு, ஒழிவு, முடிவு, நிறுத்தம், பற்றின்மை.

3065. விரம: = நிறுத்தம், சூரியன் அஸ்தமித்தல்.

3066. விரல = மெல்லிய, மிருதுவான, நெருக்கமில்லாத, அபூர்வமான, அதிசயமான, சிறிதான, கொஞ்சமான.

3067. விராக3: = நிறத்தின் மாறுபாடு, திருப்தியின்மை, பற்றின்மை, வெறுப்பு.

3068. விராம: = முடிவு, தடங்கல், நிறுத்துதல், நிறுத்தம், வாக்கியத்தின் முடிவைக் குறிக்கும் முற்றுப்புள்ளி அல்லது
கோடு.

3069. விராஜ் = அழகு, காந்தி, பிரகாசம், உடல், பிரமனின் முதல் படைப்பு.

3070. விரிஞ்சி: = பிரமன், விஷ்ணு, சிவன்.

3071. விருத3: = விருத3ம் = பட்டம், விருது, உரக்கக் கத்துதல், பிரகடனம்.

3072. விருத்3த4 = தடுக்கப்பட்ட தலைகீழான, விரோதமான, எதிரிடையான.

3073. விரூப = இயற்கையிலில்லாத, கெட்ட, அழகற்ற.

3074. விரூபாக்ஷ: = சிவன்.

3075. விரோத4: = பகைமை, கலகம், இடையூறு, ஒவ்வாமை, தடை.

3076. விரோதி4ன் = எதிரி.

3077. விளம்ப3: = விளம்ப3னம் = தொங்குதல், தாமதம் .

3078. விலஸத் = விளையாட்டில் பிரியமுள்ள, பளபளக்கும், பிரகாசிக்கும்.

3079. விலஸனம் = விளையாடுதல், பளபளத்தல், பிரகாசித்தல்

3080. விலக்ஷண = அசாதரணமான, கெட்ட லக்ஷணங்கள் உடைய.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *