3041. விபுல = பெரிய, அதிகமான, விஸ்தாரமான, நிரம்ப.
3042. விப்ர: = அந்தணன், அறிவாளி.
3043. விப்ரயோக3: = ஒற்றுமையின்மை, பிரிவு, கலகம்.
3044. விபல: = பழம் இல்லாத, பயன் இல்லாத, லாபம் இல்லாத, வீணான.
3045. விபூ3த4: = கற்றறிந்தவன், தேவதை, முனிவன், சந்திரன்.
3046. விப4க்த = பிரிக்கப்பட, தனித் தனியான, பலவிதமான.
3047. விப4க்தி: = பங்கிடுதல், பிரிதல், தனியாக்குதல், பங்கு, பிரிவு, பெயர்சொற்களின் வேற்றுமை.
3048. விப4வ: = பராக்கிரமம், செல்வம், சக்தி, வல்லமை, பதவி, மஹத்வம், பெருமை, மோக்ஷம், பேரின்பம்.
3049. விபா4க3: = பாகம், பகுதி, பிரிவு, முன்னோர் சொத்தில் பங்கு, பாகம் பிரித்தல், பங்கு போடுதல்.
3050. விபு4: = காலம், இடம், பிரபு, ஆத்மா, ஆளுபவன், அரசன், ஆகாயம், சிவன், விஷ்ணு, பிரமன்.
3051. விபூ4தி: = பராக்கிரமம், செல்வச் செழிப்பு, உயர்வு, கௌரவம், செல்வம், சொத்து, அதிசய சக்தி, சாம்பல், திருநீறு.
3052. விபூ4ஷணம் = விபூ4ஷா = ஆபரணம், அணிகலன், அலங்காரம்.
3053. விப்4ரம: = அலைதல், சுற்றுதல், தவறு, குறை, குழப்பம், மோஹம், அழகு, ஐயம், சந்தேஹம்.
3054. விமர்ச’: = விமர்ச’னம் = பரீட்சித்தல், ஆலோசித்தல், விவாதித்தல், விரிவுரை.
3055. விமான: = விமானம் = அவமானம் = அவமதிப்பு, வாஹனம், ஆகாயவிமானம், ஏழு மாடியுள்ள அரண்மனை / மாளிகை.
3056. விமுக்த = விடப்பட, சுதந்திரமான.
3057. விமுக2 = திருப்பிய முகத்துடன், வெறுப்புடன், விரோதமான, எதிரான.
3058. விமோசனம் = விமோக்ஷணம் = விடுதலை, விடுவித்தல்.
3059. வியத் = விண்வெளி, ஆகாயம்.
3060. வியுக்த = பிரிந்த, விலகிய, விடப்பட்ட, இல்லாத.