152. வினய to விபினம்

3021. வினய = வினயம், அடக்க ஒடுக்கம், ஒழுக்கம், சிரத்தை, நன்னடத்தை.

3022. வினா = இல்லாமல், தவிர.

3023. வினாடி3: = நாழிகையின்( 1 / 60) பாகம் = 24 நொடிகள்.

3024. விநாயக: = விநாயகர், கருடன், தடை, இடையூறு, தடைகளையும் இடையூறுகளையும் நீக்குபவன்.

3025. விநாச’ = கேடு, நஷ்டம், அழிவு, நாசம், மரணம்.

3026. விநிபாத: = வீழ்ச்சி, துன்பம், அவமானம், கேடு.

3027. விநியோக3: = பங்கிடுதல், தனித்தனியாக்குதல், உபயோகித்தல், நியமித்தல், விலக்குதல்,

3028. வினீத = விலக்கப்பட்ட, கற்பிக்கப்பட்ட, நன்னடத்தையுள்ள, அன்புள்ள, அழகிய, மனதை ஈர்க்கும்.

3029. விநேய: = மாணவன், சீடன்.

3030. வினோத3: = விளையாட்டு, சந்தோஷம், மகிழ்ச்சி, பிரியம், ஆசை, ஊக்கம், உற்சாகம்.

3031. வின்யாஸ: = ஒழுங்கு படுத்துதல், இட்டு வைத்தல்.

3032. விபஞ்சிகா = விபஞ்சி = வீணை, விளையாட்டு.

3033. விபண: = விற்பனை, வியாபாரம்.

3034. விபணி: = விபணீ = மண்டி, கடை, சந்தை, வியாபாரம்.

3035. விபணின் = வியாபாரி, கடைக்காரன்.

3036. விபத்தி: = விபதா3 = விபத்3 = துன்பம், கஷ்டம், வேதனை, நஷ்டம், அழிவு.

3037. விபரீத = விபரீதமான, மாறான, பொய்யான, எதிர்மறையான.

3038. விபர்யய: = எதிரிடை, பகைமை, மாற்றம், இல்லாமை, கேடு, துன்பம், மறைவு, அழிவு, பிரளயம், தவறு.

3039. விபாக: = சமையல், ஜீரணித்தல், பழுத்த தன்மை, பயன், துக்கம், வேதனை, கஷ்டம்.

3040. விபினம் = காடு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *