151. விதந்து: to விது4ர:

3001. விதந்து: = விதவை.

3002. விதரணம் = கொடை, தியாகம், அக்கரை சேருதல், தாண்டிச் செல்லுதல்.

3003. வித்தம் = செல்வம், தனம்.

3004. வித்3 = சொல்ல, அனுபவிக்க, கற்பிக்க, விவரிக்க, காண்பிக்க, வெளிப்படுத்த, நன்கு தெரியும்படிச் செய்ய.

3005. வித3க்3த4 = சாம்பலாக்கப்பட்ட, எரிக்கப்பட்ட, சமைக்கப்பட்ட, சேதம் அடைந்த, கெட்டிக்கார, திறமை வாய்ந்த.

3006. விதி3த = புகழ்பெற்ற, அறியப்பட்ட, குறிப்பாகத் தெரிவிக்கப்பட்ட.

3007. விதூ3ஷக: = பரிகாசம் செய்பவன், சிரிக்கச்செய்பவன், கதாநாயகனின் முக்கிய தோழன், கோமாளி, விதூஷகன்.

3008. விதே3ச’: = வெளிநாடு.

3009. வித்3யா = கல்வி, அறிவு, படிப்பு.

3010. வித்யா3ர்தி2ன் = மாணவன்.

3011. வித்3யலாய: = பள்ளிக்கூடம், கல்விக்கூடம்.

3012. வித்3யுத் = மின்னல், இடி, மேகங்களின் கர்ஜனை.

3013. வித்3ரும: = பவளச் செடி, பவளம்.

3014. வித்வான் = அறிவாளி, கற்றறிந்தவன்.

3015. வித4: = விதா4 = மாதிரி, வகை, அமைப்பு, ரகம், செழுமை, மடிப்பு, யானையின் தீனி.

3016. விதா4த்ரு = செய்பவன், அமைப்பவன், படைப்பவன், பிரமன், தலைவிதி.

3017. விதி4: = செயல், சடங்கு, நடத்தை, முறை, ஒழுங்கு, சட்டம், கட்டளை, பிரமன், அதிர்ஷ்டம், விதி, காலம்.

3018. விதி4த: = விதி4வத் = விதி4பூர்வகம் = முறையான, முறைப்படி, நியமப்படி, குறிக்கப்பட்ட.

3019. விது4: = சந்திரன், விஷ்ணு, கற்பூரம்.

3020. விது4ர: = மனைவியை இழந்தவர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *