2981. விகீர்ண: = பரப்பப்பட்ட, சிதறடிக்கப்பட்ட, நன்கு அறியப்பட்ட, புகழ் அடைந்த.
2982. விக்ரம: = சூரத்தனம், பராக்கிரமம்,திறமை, விஷ்ணு, காலடி, அடிச் சுவடு.
2983. விக்ரிய: = விற்றல், விற்பனை.
2984. விக்யாத = புகழ் பெற்ற, ஒத்துக்கொள்ளப்பட்ட.
2985. விக3த = சென்ற, மறைந்த, பிரிக்கப்பட்ட, காலியான, இல்லாதுபோன.
2986. விக3லித = கீழே விழுந்த, நழிவி விழுந்த, உருகிய, கரைந்த, வடிந்த, சென்ற, மறைந்த, தளர்ந்த, அவிழ்ந்துபோன.
2987. விக்3ரஹ: = உருவம், உடல், பிரிதல், பரவுதல், விஸ்தரித்தல், கழகம், சண்டை.
2988. விக4டித = பிரிக்கப்பட்ட, உடைக்கப்பட்ட, தனித்தனியாக்கப்பட்ட.
2989. விக்ன4: = தடை, கஷ்டம் , கடினம்.
2990. விக்னேச’:= விக்னேச்’வர: = கணேசர்.
2991. விசக்ஷண = கற்றறிந்த, திறமையுள்ள.
2992. விசார: = விசாரணம் = சிந்தித்தல், ஆலோசித்தல், அலசிப்பார்த்தல், ஆராய்ந்து பார்த்தல், சந்தோஷம், விசாரித்தல்.
2993. விசித்ர = பலவர்ணமுள்ள, பலவிதமான, அழகான, ஆச்சரியம் அளிக்கும்.
2994. விச்சி2தி = வெட்டுதல், உடைத்தல், மறைவு, குறை, நிறுத்தம், நிறுத்துதல், எல்லை, பிரித்தல்.
2995. விஜய: = வெற்றி, அர்ஜுன், ஜெயித்தல்.
2996. விஜித = ஜெயிக்கப்பட்ட, தோற்கடிக்கப்பட்ட.
2997. விஜ்ரும்ப4ணம் = கொட்டாவி விடுதல்,மொட்டுக் கட்டுதல், மலருதல்,காட்டுதல், தோன்றுதல், திறத்தல்.
2998. விஞ்ஞாப்தி: = விஞ்ஞாபனா = விஞ்ஞாபனம் = வேண்டுகோள்.
2999. விஞ்ஞானம்= அறிவு, அறிந்து கொள்ளும் சக்தி, திறமை, புத்திசாலித்தனம்.
3000. விட3ம்பனம் = நடிப்பு, வஞ்சனை, துன்புறுத்துதல், பரிஹசித்தல்.