149. வால்மீக: to விக்ருதி

2961. வால்மீக: = வால்மீகி: = ராமாயணத்தை இயற்றிய முனிவர்.

2962. வாஸ: = வாசனை, ஆடை, வீடு, இருப்பிடம், இடம்.

2963. வாஸவ: = இந்திரன்.

2964. வாஸனா = நினைவினால் ஏற்படும் அறிவு, முன்னால் ஏற்பட்ட மனப் பதிவுகளால் எஞ்சி நிற்கும் அறிவு.

2965. வாஸரம் = வாஸர: = கிழமை.

2966. வாஸஸ் = ஆடை, வஸ்திரம்.

2967. வாஸுகி: = பாம்புகளின் அரசன்.

2968. வாஸ்தவ = வாஸ்தவிக =உண்மையான, உள்ளது போன்ற.

2969. வாஸ்து = வீடு, பூமி, மனை, திடல், இடம், வசிக்கும் இடம்.

2970. வாஹ: = சுமத்தல், சுமப்பவன், குதிரை, எருது, வண்டி, காற்று.

2971. வாஹக: = சுமப்பவன், கூலியாள், வண்டி ஓட்டுபவன், தேர்ப்பாகன்.

2972. வாஹனம் = சுமத்தல், வண்டி, வாகனம், ஏறிச் செல்லும் விலங்கு.

2973. வாஹிநீ = போர்ப்படை, படையின் பகுதி.

2974. விம்ச’தி = இருபது.

2975. விகர்ஷண : = விகர்ஷ: = அம்பு, இழுத்தல், கோடு கிழித்தல்.

2976. விகல = குறைவான, குழப்பம் அடைந்த, நடுங்கிய, பயந்த, சோர்வடைந்த.

2977. விகல்பம் = சந்தேஹம், ஐயம், உபாயம், யுக்தி, வேறுபாடு, குறை, குற்றம், வகை, அறியாமை.

2978. விகார: = உருவத்தில் மாற்றம், இயற்கை நிலையில் மாற்றம், நோய், பரபரப்பு, உணர்ச்சி.

2979. விகாஸ: = விகாஸனம் = மலருதல், புஷ்பிதல், விரிவடைதல்.

2980. விக்ருதி = விக்ரியா = மனதின் இயற்கை நிலை / உருவம்/ முறை இவற்றின் மாறுதல், நோய், உணர்ச்சி, கோபம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *