281. கர்தவ்ய = செய்யத் தக்க, செய்ய வேண்டிய.
282. கர்த்ரு = செய்பவன், காரணமானவன், விஷ்ணு, சிவன்.
283. கர்மன் = கார்யம், செயல், வேலை, தொழில், பதவி, கடமை, சடங்கு, பயன், பாக்கியம், விதி.
284. கர்ம காண்ட3ம் = வேதத்தின் ஒரு பகுதி.
285. கர்மேந்த்3ரியம் = வேலை செய்யும் உடல் உறுப்புக்கள் (கை, கால், வாய், மல ஜல த்வாரங்கள்)
286. கர்ஷணம் = கோடு கிழித்தல், இழுத்தல், உழுதல், வசீகரித்தல், பிடித்தல், துன்பம் தருதல்.
287. கலங்க: = களங்கம், கரும்புள்ளி, அழுக்கு, கறை, அவப்பெயர், கெடுதி, தோஷம், துரு.
288. கலச’ம் = குடம், நீர் வைக்கும் பாத்திரம்.
289. கலஹம் = சண்டை, போர், குயுக்தி, கலஹம், பொய்யான பேச்சு, ஹிம்சிதல், அடித்தல்.
290. கலா = ஒரு பொருளின் சிறு துண்டு, சிறு பாகம், வட்டி, காலத்தின் ஒரு அளவு, இசை நடனம் சிற்பம் போன்ற கலைகள், சாமர்த்தியம், மதிநுட்பம், வஞ்சனை, ஏமாற்றுதல்.
291. கலாப: = கட்டு, மூட்டை, குவியல், கூட்டம், மயில் தோகை, ஒட்டியாணம், ஆபரணம், யானையின் கழுத்தில் கட்டப்படும் கயிறு, அம்பறாத்துணி, அம்பு, சந்திரன், புத்திசாலி, ஒரு வகைக் கவிதை,
292. களேவரம் = களேப3ரம் = உடல்.
293. கல்ப: = நியமம், பிரேரணை, சங்கல்பம், பிரளயம், பிரம்மனின் ஒரு தினம், ஆறுவேதங்களில் ஒன்று.
294. கல்பதரு = கற்பக விருக்ஷம், விரும்பியதைக் கொடுக்கும் ஒரு மரம்.
295. கல்பனா = பொருந்துதல், செய்தல், அலங்கரித்தல், புதிதாகக் கண்டு பிடித்தல், கற்பனை, அனுமானம், பொய்யான கதை, யுக்தி.
296. கல்ம ஷம் = அழுக்கு, மாசு, பாவம்.
297. கல்யாணம் = அதிருஷ்டம், ஆனந்தம், செழுமை, நல்லகுணங்கள், திருவிழா, பொன், சுவர்க்கம்.
298. கல்யாணீ = பசு, புனிதமான பசு.
299. கவசம் = போர்க்கவசம், தாயத்து, ரக்ஷை, ரஹசிய அக்ஷரம்.
300. கவளம் = உள்ளங்கை கொள்ளும் அளவு, வாய் கொள்ளும் அளவு.