148. வாதி3ன் to வாலி:

2941. வாதி3ன் = வாதாடுபவன்,பேசுகிறவன், எதிர்க்கட்சிக்காரன், வாதி.

2942. வாத்யம் = இசைக்கருவி.

2943. வாந்தி: = வாந்தி எடுத்தல்.

2944. வாப: = விதை விதைத்தல்.

2945. வாபனம் = தலை மயிர் வெட்டிக் கொள்ளுதல், சவரம் செய்து கொள்ளல்.

2946. வாபி: = வாபீ = கிணறு.

2947. வாம = இடது, எதிரான, அழகான.

2948. வாமன: = குள்ளன்.

2949. வாயஸ:= காக்கை, அகில், தூபம் போடும் பொருள்.

2950.வார: = மூடி, போர்வை, கூட்டம், குவியல், பரிமாணம், அளவு, கிழமை, காலம், போது, தடவை, வாயில், சிவன்.

2951. வாரண: = யானை, போர்க்கவசம்.

2952. வாராணஸீ = காசி.

2953. வாரி = தண்ணீர்.

2954. வாரிஜம் = தாமரைப்பூ.

2955. வாரிஜ: = சங்கு.

2956. வாரிதி4: = வாரிநிதி4: = வாரிராசி’: = கடல்.

2957. வாருணீ = மேற்கு, கள், மதுபானம்.

2958. வார்தா = செய்தி, சமாசாரம். தொழில், பிழைப்பு, ரகசியச்
செய்தி.

2959. வார்த்3த4கம்= வார்த்3த4க்யம் = கிழத் தன்மை.

2960. வாலி: = குரங்குகளின் அரசன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *