146. வல்கல: to வஹதீ

2901. வல்கல: = வல்கலம் = மரவுரி, மரப்பட்டை .

2902. வால்மீக: = வால்மீகம் = எறும்புப் புற்று, கரையான் புற்று.

2903. வல்லப4: = கணவன், காதலன், அதிகாரி, மேற்பார்வை இடுபவன்.

2904. வல்லரி: = வல்லரீ = வல்லி: = வல்லீ = கொடி, படரும் தாவரம்.

2905. வச’ = உட்பட்ட, கட்டுப்பட்ட, கீழ்ப்படிந்த, வசப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட.

2906. வச’: = வச’ம் = விருப்பம், ஆசை, சக்தி, திறன், அதிகாரம், தன்வசம், பிறர் வசம்.

2907. வசா’ = ஸ்த்ரீ, மனைவி, கணவனின் சஹோதரி, பசு,
பெண் யானை, மலடி.

2908. வச்’ய = கட்டுப்பட்ட, உட்பட்ட, வசம் ஆக்கிக் கொள்ளத் தக்க.

2909. வஸ் = இருக்க, வசிக்க, குடி இருக்க, தங்க, கழிக்க, செலவிட.

2910. வஸதி: = வஸதீ = வீடு, இருப்பிடம், இருத்தல், வசித்தல், இரவு, ஓய்வெடுக்கும்நேரம்.

2911. வஸனம் = இருப்பிடம், இருத்தல், வசித்தல், ஆடை, துணி, ஆடை அணிதல்.

2912. வஸந்த: = இளவேனில், மன்மதனின் தோழன், ஒரு ராகத்தின் பெயர்.

2913. வஸா = உடலில் உள்ள கொழுப்பு .

2914. வஸு = செல்வம் , ரத்னம், தண்ணீர், பொருள், தங்கம்.

2915. வஸு: = அஷ்ட வசுக்களில் ஒருவர், எண் எட்டு, சூரியன், ஒளிக்கதிர், அக்னி, நீர் நிலை.

2916. வஸுதா4 = வசுமதி = வஸுந்த4ரா = பூமி.

2917. வஸ்து = பொருள், உண்மை, விஷயம், செல்வம்.

2918. வஸ்த்ரம் = வேஷ்டி, இடையில் அணிந்த உடை.

2919. வஹ் = சுமக்க, தாங்க, முன் செல்ல, தள்ள, கொண்டுவர, முட்டுக் கொடுக்க, நிறுத்த, அனுபவிக்க.

2920. வஹதீ = வஹா = நதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *