145. வருண: to வலி:

2881. வருண: = வருண தேவன், மேற்கு திக்பாலகன், சமுத்திரம்.

2882. வரேண்ய = ஆசைப் படத் தக்க, விரும்பத் தக்க, மேலான.

2883. வர்க3: = வகுப்பு, வகை, வர்க்கம், அத்யாயம்,புத்தகத்தின் பாகம்.

2884. வர்சஸ் = பலம், சக்தி, காந்தி, பிரகாசம், உருவம், அமைப்பு, வீர்யம்.

2885. வர்ஜ: = தள்ளிவிடுதல், நீக்கிவிடுதல், விட்டுவிடுதல்.

2886. வர்ஜனம் = தியாகம், துறத்தல், அடித்தல், விட்டுவிடுதல், கொலை செய்தல்.

2887. வர்ஜம் = நீக்கி, விலக்கி, விட்டு விட்டு, தவிர.

2888. வர்ஜித = நீக்கப்பட்ட, விலக்கப்பட்ட, இல்லாத.

2889. வர்ண: = நிறம், வர்ணம், இனம், ஜாதி, அழகு, வகை, எழுத்து, புகழ், உருவம், குணம்.

2890. வர்ணனம் = வர்ணித்தல், புகழ்தல், வர்ணம் தீட்டுதல், எழுதுதல்.

2891. வர்த்தமான = தற்சமயத்திய, இருக்கின்ற, வாழ்கின்ற.

2892. வர்த்தி: = வர்த்தீ = விளக்குத் திரி, கண் மை, களிம்பு, பூச்சு, சுருட்டப்பட்ட பொருள்.

2893. வர்துல = உருண்டையான, வட்ட வடிவான.

2894. வர்த்மன் = சாலை, பாதை, வழி, முறை, ஓரம், கண் இமை.

2895. வர்த4: = பெருக்குதல் , அதிகமாக்குதல், உயர்த்துதல், வெட்டுதல், பிரித்தல், வகுத்தல்.

2896. வர்த4க: = வர்தி4க: = வர்த4கின் = தச்சன்.

2897. வர்ஷ: = வர்ஷம் = மழை, பொழிவு, தெளித்தல், ஆண்டு, மேகம், தேசம்.

2898. வலக்3ன: = வலக்3னம் = இடுப்பு.

2899. வலய: = வளையல், வலயம், வட்டம், பரிதி.

2900. வலி: = வலீ = மடிப்பு, சுருள், சுருக்கம், கூரையின் ஓரப்பகுதி,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *