2861. வந்த3னம் = வணங்குதல், துதித்தல்.
2862. வந்த்3ய = வந்த3னீய = வணங்கத் தக்க, பூஜிக்கத் தக்க.
2863. வன்ய = காட்டினுடைய, காட்டிலுண்டான.
2864. வப் = விதைக்க, விதைகளைத் தெளிக்க, நாற்று நட, மொட்டை / சவரம் செய்ய, நெசவு செய்ய.
2865. வபனம் = விதை விதைத்தல், மயிர் வெட்டுதல், சவரம் செய்தல், வீரியம், விதை.
2866. வபா = கொழுப்பு, துளை, குடலின் கீழுள்ள மெல்லிய தோல், எறும்புப்புற்று.
2867. வபுஸ் = உடல், உருவம், தோற்றம், சாரம், இயற்கை, சுபாவம், காந்தி, அழகு.
2868. வப்ர = வப்ரம் = கோட்டின் மதில் சுவர், மலைச் சரிவு, பாரை, பீடபூமி, அஸ்திவாரம், வயல், அகழி, உருண்டையான பொருளின் சுற்றளவு.
2869. வம: = வமனம் = கக்குதல், துப்புதல், வாந்தி எடுத்தல்.
2870. வயஸ் = வயது, யௌவனம், பறவை.
2871. வயஸ்ய: = நண்பன், தோழன்.
2872. வர: = மேன்மையான, சிறந்த.
2873. வர = பொறுக்கி எடுத்தல், வரம் கொடுத்தல், கொடை, வெகுமதி, யாசித்தல், விருப்பம், மணமகன், மாப்பிள்ளை, வேலி, வேண்டுகோள்.
2874. வரணம் = வேண்டுதல், யாசித்தல், மூடுதல், மறைத்தல், காத்தல், பொறுக்கி எடுத்தல்.
2875. வரண: = இந்திரனின் ஒரு பெயர், மதில் சுவர், பாலம், மாவிலிங்க மரம், ஒட்டகம்.
2876. வரம் = அதிக நல்லதான / மேலானதான / சிறந்ததான.
2877. வராஹ: = பன்றி, மேகம், மலை, விஷ்ணுவின் ஓர் அவதாரம்.
2879. வரிஷ்ட = சாலச் சிறந்ததான, மிக முக்கியமான, மிகவும் பளுவான, மிகவும் அகலமான.
2880. வரீயஸ் = ஒன்றைக் காட்டிலும் மேம்பட்ட, அதிக மேன்மையான/ நல்லதான/ பெரியதான/ அகலமானதான.
Extremely helpful to a learner like me. Thank you…. Thank you very much.
dear Ms. Laitha,
I am sorry to rely yo you so very late.
I was busy with my other blogs that
I did not make time to enter here and check for the feedback.
Welcome to visit my website to make use of the other interesting blogs!
http://visalakshiramani.weebly.com/