2841. வட: = ஆலமரம், சிப்பி, சோழி, பந்து, கயிறு.
2842. வடீ = கயிறு, மாத்திரை, உருண்டை.
2843. வடு:= வடுக: = சிறுவன், பிரம்மச்சாரி.
2844. வணிஜ் = வணிஜ: = வாணிஜ: = வியாபாரி.
2845. வத்ஸ: = கன்று, சிறுவன், சந்ததி, மகன், ஆண்டு.
2846. வத்ஸர: = ஆண்டு, வருடம்.
2847. வத்ஸல = பிரியம் உள்ள, அன்புள்ள.
2848. வத்ஸா = பெண் கன்று.
2849. வத்3 = சொல்ல, பேச, கோஷிக்க, பிரகடனம் செய்ய, வர்ணிக்க, கூப்பிட, பாட.
2850. வதனம் = வாய், முகம், தோற்றம்
2851. வத3ந்ய = வதா3ன்ய = அதிகம் பேசும், நன்றகப் பேசவல்ல.
2852. வத4: = கொலை, அழித்தல், அடித்தல், மறைத்தல், கணிதத்தில் கூட்டல்.
2853. வது4: = யௌவன ஸ்த்ரீ, மகனின் மனைவி.
2854. வதூ4: = மணப் பெண், மனைவி, மகனின் மனைவி, ஸ்த்ரீ.
2855. வனம் = காடு, தண்ணீர், கொத்து, புதர், இருப்பிடம்.
2856. வனாந்த: = காட்டின் ஓரம்.
2857. வனசர: = காட்டில் வாழம் மனிதன் அல்லது விலங்கு.
2858. வனஸ்பதி: = மரம், காட்டு மரம்.
2859. வனிதா = பெண், ஸ்த்ரீ, மனைவி.
2860. வந்த்3 = வணங்க, ஆராதிக்க, பூஜிக்க, துதிக்க, நமஸ்காரம் செய்ய.