2821. லௌகிக = சாதாரணமான, இவ்வுலக சம்பந்தமான.
2822. லௌகிகம் = உலக வழக்கு.
2823. லௌகிகா: = சாதாரண உலக மக்கள்.
2824. வ = போல, அது போல.
2825. வ: = வருணன், தோள், கையின் மேற்பகுதி, காற்று, சமாதானம் செய்து கொள்ளுதல், சுபம், கடல், துணி, புலி, வீடு, ராஹூ.
2826. வம்ச’: = மூங்கில், குடும்பம், இனம், பரம்பரை, புல்லாங்குழல், தடி, முதுகெலும்பு, கூட்டம், சேர்க்கை,
ஒரு அளவு = பத்து முழம்.
2827. வம்சீ’ = குழல், புல்லாங்குழல், குழாய், ரத்தக்குழாய், தமனி.
2829. வக்தவ்ய = சொல்லத்தகுந்த, பேசத்தகுந்த, நிந்திக்கத்தக்க, மட்டரகமான.
2830. வக்த்ரு = பேச்சாளன்,பேசுகின்றவன், பேசுவதில் வல்லவன், கற்றறிந்தவன்.
2831. வக்த்ரம் = வாய், முகம், அலகு, ஆரம்பம், அம்பின் நுனி.
2832. வக்ர = கோணலான, வளைந்த, நேர்மையற்ற, சுருட்டையான, கொடிய, இரட்டைப் பொருளுள்ள, கோள்களின் பிற்போக்கான சலனம்.
2833. வக்ரதுண்ட3: = விநாயகர், கிளி.
2834. வசனம் = சொல்லுதல், வாக்கியம், படித்தல், உருப்போடுதல், உத்திரவு, வேதத்தின் அல்லது சாஸ்திரத்தின் வாக்கியம்.
2835. வசஸ் = வசனம்,பேச்சு, வாக்கியம், கட்டளை, ஒழுங்குமுறை, சட்டம், புத்திமதி.
2836. வஜ்ர: = வஜ்ரம் = வஜ்ராயுதம், இடி, வைரம், கஞ்சி.
2837. வஜ்ரீன் = வஜ்ரப்4ருத் = இந்திரன்.
2838. வஞ்சக: = ஏமாற்றுபவன், போக்கிரி, நரி, கீரி.
2839. வஞ்சித = மோசம் செய்யப்பட்ட, அபகரிக்கப்பட்ட.
2840. வட: = ஆலமரம், சிப்பி, சோழி, பந்து, கயிறு.