2801. லோகஸங்க்3ரஹ: = ஜகத் முழுவதும், உலகின் நலன்.
2802. லோகஸ்தி2தி: = உலக இருப்பு, உலகநீதி.
2803. லோகாசார: = உலக வழக்கு.
2804. லோகாந்தரம் = பரலோகம், வேறு உலகம்.
2805. லோகபவாத3: = மக்கள் இகழும்.
2806. லோகேச’: = அரசன், சக்கரவர்த்தி, பிரமன்.
2807. லோகோக்தி: = பழமொழி.
2808. லோகோத்தர = அசாதாரணமான, அபூர்வமான, மிக மேன்மையான.
2809. லோசனம் = கண், பார்வை, பார்த்தல்.
2810. லோப: = மறைவு, இன்மை, குறை, அபஹரித்தல், கொள்ளை அடித்தல், ஆக்கிரமித்தல், விட்டுவிடுதல், அழிவு.
2811. லோப4: = ஆசை, பேராசை, குழப்பம், விருப்பம், புத்தி மயக்கம்.
2812. லோம: = வால், உடலின் மீது உள்ள மயிர்.
2813. லோமச’: = ஆடு, செம்மறியாடு, அடர்த்தியான மயிர் உடையவன்,
2814. லோல = ஆடுகின்ற, தொங்குகின்ற, அசைகின்ற, குழப்பமான, திடமற்ற, ஆசையுள்ள, அழிவு உள்ள.
2815. லோலுப= லோலுப4 = ஊக்கம் உள்ள, பேராசை உள்ள.
2816. லோஷ்ட: = லோஷ்டம் = மண்ணாங்கட்டி.
2817. லோஹ: = உலோகம், தாதுப் பொருள், இரும்பு, எஃகு, தாமிரம், தங்கம், ரத்தம்.
2818. லோஹித: = சிவப்பு வர்ணம் உள்ள, செவ்வாய், பாம்பு, ஒரு வகை மான்.
2819. லோஹிதம் = குங்குமப் பூ, தாமிரம், ரத்தம், சண்டை, சிவப்புச் சந்தனம்.
2820. லோஹிதாக்ஷ: = குயில், பாம்பு, விஷ்ணு, சிவப்புப் பசை அல்லது பூச்சு.