140. லிபி: to லோகயாத்ரா

2781. லிபி: = லிபீ = ஒரு மொழியின் எழுத்து வரிசை, எழுதும் கலை, கையெழுத்துப் பிரதி, தஸ்தாவேஜு .

2782. லீ = உருக்க, ஒன்றுசேர, கரைந்துபோக.

2783. லீட 4 = நக்கப்பட்ட, ருசி பார்க்கப்பட்ட, உண்ணப்பட்ட.

2784. லீன = ஒன்று சேர்ந்த, ஒட்டிக் கொண்ட, மறைந்த, மறைக்கப்பட்ட, உருகிய, உருக்கப்பட்ட, கரைந்துபோன, இணைந்த, ஈடுபட்ட, இளைப்பாறும், லயித்துப்போன.

2785. லீலா = விளையாட்டு, கேளிக்கை, மகிழ்ச்சி, காதல் விளையாட்டு, அழகு, தோற்றம்.

2786. லீலாகா3ர: = லீலாகா3ரம்= லீலாக்3ருஹம்= விளையாடும் இடம், மகிழ்ச்சிக்குரிய இடம்.

2787. லுப்த = உடைக்கப்பட்ட, உடைந்த, கொள்ளை அடிக்கப்பட்ட, அபஹரிக்கப்பட்ட, உபயோகமற்ற, மறைந்த.

2788. லுப்த4 = காமவெறியன், பேராசைக்காரன், வேடன்.

2789. லூதா = சிலந்தி, எறும்பு.

2790. லேக: = எழுதும் முறை, எழுதியது, கடிதம், பத்திரம், தஸ்தாவேஜு, தேவன்.

2791. லேக2க: = எழுதுபவன், பிரதிஎடுப்பவன், ஓவியன்.

2792. லேக2னம் = எழுதுதல், பிரதி எடுத்தல், இளைத்துப் போதல், தொடுதல், பனை ஓலை.

2793. லேக2நீ = லேகி2நீ = பேனா, நாணல், தட்டையான எழுதுகோல், சிறு கரண்டி.

2794. லேகா2 = எழுதும் முறை, எழுதுதல், கோடு, கீறல், வரிசை, பட்டை, ஓவியம், சித்திரம், இரண்டாம் பிறை.

2795. லேப: = பூசுதல், பூச்சு, களிம்பு, களங்கம், நிந்தனை, பாவம், உணவு.

2796. லேச’: = சிறு பகுதி, மிகக் குறைவு, ஒரு சொல்லணி.

2997. லேஹ்யம் = நக்கி உண்ணும் உணவு அல்லது மருந்து.

2798. லோக: = பூவுலகம், ஜனங்கள், பிரஜைகள், கூட்டம்,பார்வை, தோற்றம்.

2799. லோகநாத2: = பிரம்மா, விஷ்ணு, சிவன், அரசன்.

2800. லோகயாத்ரா = உலகவாழ்க்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *