261. கன்யா = திருமணம் ஆகாத பெண், மகள், பத்து வயது நிரம்பிய பெண், இன்னமும் வயதுக்கு வராத பெண், குமாரி, ஸ்த்ரீ, கன்யா ராசி, துர்க்கை.
262. கபாலம் = மண்டை ஓடு, உடைந்த பாத்திரத்தின் துண்டு, ஓட்டாஞ்சல்லி, கூட்டம், திருவோடு, கிண்ணம், பாத்திரம், மூடி.
263. கபாலின் = சிவனுக்கு ஒரு பெயர், கீழ் ஜாதி மனிதன்.
264. கபி: = குரங்கு, வால் இல்லாக் குரங்கு, யானை, வாசனை தூபத்தின் புகை, விளாமரம், சூரியன், சாம்பராணி,
265. கபித்தம் = விளாம்பழம்.
266. கபில: = ஒரு முனிவரின் பெயர், நாய், சாம்பிராணி, பழுப்பு நிறம், தூபம்.
267. கபீந்த்3ர: = ஹனுமான், சுக்ரீவன்.
268. கபோத: = புறா.
269. கபோல: = கன்னம்.
270. கமண்டு3லு: = துறவிகள் உபயோகிக்கும் மரத்தால் ஆன தண்ணீர் பாத்திரம்.
271. கமனீய = விரும்பத்தக்க, வசீகரமான, அழகான.
272. கமலம் = தாமரை, தண்ணீர், தாமிரம், மருந்து, ஸாரஸபக்ஷி.
273. கமலஜ: = பிரம்மா, ரோஹிணி நக்ஷத்திரம்.
274. கமலா = லக்ஷ்மி தேவி, சிறந்த பெண்மணி.
275. கமலினீ = தாமரைத் தண்டு, தாமரைக் கூட்டம், தாமரை ஓடை.
276. கர: = கை, கிரணம், துதிக்கை, சுங்கம், வரி, காணிக்கை, கப்பம், ஆலங்கட்டி, ஹஸ்த நக்ஷத்திரம், செய்பவன், ஒரு அளவு (24 கட்டைவிரல்களின் நீளம்).
277. கரணம் = செய்தல், அனுஷ்டித்தல், காரியம், மத சம்பந்தமான காரியம், வேலை, தொழில், இந்திரியம், உடல், காரணம், உத்தேசம், பத்திரம், தஸ்தாவேஜு.
278. கரால = பயங்கரமான, பெரிய, விஸ்தாரமான, உயரமான, அகலமான, வாய்பிளந்த, கரடுமுரடான, சமம் இல்லாத, கடுமையான.
279. கருண = மிருதுவான, தளிரான, இரக்கம் உள்ள, கருணை உண்டாக்கும், சோகம் ததும்பும்.
280. கர்ண: = காது, கங்காளத்தின் இரு புறங்களிலும் உள்ள வளையம், படகு அல்லது கப்பலின் சுக்கான், ஒரு வீரனின் பெயர், முக்கோணத்தில் நேர் கோணத்துக்கு எதிரே உள்ள பக்கம் (hypotenuse of a right angled triangle).