2761. லக்ஷ்மீ: = லக்ஷ்மீ தேவி, அதிருஷ்டம், செல்வம், செழிப்பு, அழகு, காந்தி, முத்து, மஞ்சள்.
2762. லக்ஷ்மிகாந்த:= விஷ்ணு, அரசன்.
2763. லாக4வம் = லேசான தன்மை, அற்பமான தன்மை, மதிக்க முடியாதது, எண்ணம் இல்லாதது, அவமதிப்பு, வேகம், திறமை.
2764. லாங்க3லம் = வால், ஆண்குறி.
2765.லாங்கூ3லம் = கலப்பை, ஆண்குறி, பனை மரம்,.
2766. லாஜா: = பொரி.
2767. லாஞ்ச2னம் = குறி, பெயர், களங்கம், புள்ளி.
2768. லாப4: = லாபம், வருவாய், சுகபோகம், பெறுதல், அடைதல்.
2769. லாப4கர = லாப4க்ருத் = லாபம் தரும்.
2770. லாலஸ = கொஞ்சப்பட்ட, விரும்பப் பட்ட, ஆசைகொண்ட, லயித்துப்போன.
2771. லக்ஷா = சிவப்பு மெழுகு, அரக்கு.
2772. லாலித்யம் = அழகு, வசீகரிக்கும் தன்மை, அன்பு, காதலை வெளிப்படுத்துதல்.
2773. லாவண்யம் = அழகு, உப்புத் தன்மை.
2774. லாஸ்யம் = நடனம், இசையோடு கூடிய நடனம்.
2775. லாஸ்ய: = நடிகன், நடனமாடுபவன்.
2776. லாஸ்யா = நடனமாடுபவள்.
2777. லிக்2 = எழுத, கோடு போட, சித்திரம் எழுத, பிறாண்ட, துருவ, கிழிக்க.
2778. லிகித = எழுதப்பட்ட, கோடு போடப்பட்ட, துருவப்பட்ட, கீறப்பட்ட, கிழிக்கப்பட்ட.
2779. லிகிதம் = தஸ்தாவேஜு, புத்தகம், எழுதப்பட்டது.
2780. லிங்க3ம்= அடையாளம், குறி, லக்ஷணம், சிவலிங்கம், ஆண்குறி, (ஆண்)பால், (பெண்)பால், வேதாந்தத்தில் சூக்ஷ்ம உடல்.