138. லலனா to லக்ஷ்மண:

2741. லல் = விளையாட, கிரீடை செய்ய, இங்கும் அங்கும் ஓட, விரும்ப, சீராட்ட.

2742. லலனா = பெண், ஸ்த்ரீ, நாக்கு.

2743. லலந்திகா = நீண்ட மாலை, பல்லி, ஓணான்.

2744. லலாடம் = நெற்றி.

2745. லலாமம் = நெற்றிச் சுட்டி, நெற்றி ஆபரணம், அலங்காரம், உயர்ந்த வஸ்து, நெற்றிப் பொட்டு அல்லது குறி, வரிசை, கோடு, கொடி, வால், பிடரிமயிர், கெளரவம், அழகு, கொம்பு.

2746. லலித = விளையாட்டில் பிரியமுள்ள, காதல் கேளிக்கையில் பிரியம் உள்ள, அன்பான, அழகான, மனதைஈர்க்கும், ருசியான, மிருதுவான.

2747. லலிதம் = விளையாட்டு, கேளிக்கை, அழகான நடை, எளிமை, சுலபத்தன்மை, காதல் விளையாட்டு.

2748. லலிதா = பார்வதி, துர்க்கை, ஸ்த்ரீ, கஸ்தூரி.

2749. லவ: = பாகம், துண்டு, பகுதி, சிறு துளி, சொட்டு, கம்பளி, மயிர், நாசம், நஷ்டம், விளையாட்டு, ராமனின் ஒரு மகன் பெயர்.

2750. லவங்க3: = லவங்கச்செடி.

2751. லவங்க3ம் = கிராம்பு.

2752. லவணம் = உப்பு.

2753. லவித்ரம் = அரிவாள்.

2754. லசு’ன: = லசு’னம்= வெள்ளைப் பூண்டு.

2755. லசி’த = விளையாடிய , தோன்றிய.

2756. லஹரி: = லஹரீ = அலை, அலை வரிசை.

2757. லக்ஷம் = லக்ஷ்யம் = எண் 1,00,000, அடையாளம், குறி, குறிக்கோள், பாசாங்கு, ஏமாற்றல், பகட்டு.

2758. லக்ஷணம் = இலக்கணை, குறி, அடையாளம், குணம், பெயர், பதவி, உத்தேசம், குறிக்கோள், உருவம், அமைப்பு, தலை, தலைப்பு, உண்மையான வர்ணனை.

2759. லக்ஷித = பார்க்கப்பட்ட, எடுத்துக் காட்டப்பட்ட, குறிப்பால் அறிவிக்கப்பட்ட, உத்தேசிக்கப்பட்ட, ஆழ்ந்து சோதிக்கப்பட்ட.

2760. லக்ஷ்மண: = தசரதனின் மகன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *