2721. ரோமச’: = ஆடு, செம்மறியாடு, பன்றி.
2722. ரோஹிணீ = பசு, சிவப்புப் பசு, ஒரு நக்ஷத்திரம், பலராமனின் தாயார், மின்னல், ஒன்பது வயது நிரம்பிய கன்னிப் பெண்.
2723. ரோஹித: = சிவப்பு வர்ணம், ஒரு வகை மீன், ஒரு வகை மான், நரி.
2724. ல: = விருத்தத்தில் குறில் மாத்திரை, இலக்கணத்தில் பத்து காலங்களைக் குறிப்பிடும் குறி.
2725. லகுட: = சிறு உலக்கை, தடி.
2726. லக்3னம் = நல்ல நேரம், நல்ல வேளை, சுபகாரியங்களை ஆரம்பிக்க நல்ல சமயம்.
2727. லகு4 = கனமில்லாத, லேசான, சிறிய, குறைவான, குட்டையான, சுருக்கமான, மட்டரகமான, பலமில்லாத, சுலபமான, மிருதுவான, மெத்தனமான, பிரியமான, அழகான, சுத்தமான, தெளிவான, சுறுசுறுப்புள்ள, ஊக்கமுள்ள, வேகமான, இலகுவான.
2728. லங்கா = ராவணனின் தலைநகரம், வேசி, கிளை.
2729. லங்க4ணம் = தாண்டுதல், கடத்தல், ஏறுதல், தாண்டிச் செல்லல், அவமதித்தல், பட்டினி கிடத்தல், ஆக்கிரமித்தல், தீங்கு செய்தல்.
2730. லஜ்ஜா = வெட்கம், வினயம்.
2731. லட்3டு3: = லட்3டு3க: = ஒரு இனிப்புத் தின்பண்டம்.
2732. லதா = கொடி, முத்துமாலை, கஸ்தூரிக் கொடி, ஒல்லியான ஸ்த்ரீ.
2733. லப்4 = அடைய, பெற, எடுத்துக் கொள்ள, வசூலிக்க, அறிந்துகொள்ள, படித்துக் கொள்ள, புரிந்துகொள்ள.
2734. லப்3த4 = அடையப்பட்ட, பெறப்பட்ட, எடுத்துக் கொள்ளப்பட்ட , அறியப்பட்ட.
2735. லப்4ய = பெறத் தக்க, அடையத்தக்க, கண்டு பிடிக்கத் தக்க, உசிதமான.
2736. லம்பட = பேராசைகொண்ட, காமம் உள்ள.
2737. லம்ப3 = தொங்குகின்ற,, நீண்ட, பெரிய, விஸ்தாரமான, உயர்ந்த.
2738. லம்ப3னம் = தொங்குதல், கரை, ஓரம், கழுத்து மாலை.
2739. லய: = அழிவு, தழுவுதல், ஒட்டிக்கொள்ளல், சேர்க்கை, மறைவு, உலகின் அழிவு, ஆழ்ந்த சிந்தனை, இசையில் தாளம், இருப்பிடம், இளைப்பாறுமிடம்.
2740. லல் = விளையாட, கிரீடை செய்ய, இங்கும் அங்கும் ஓட, விரும்ப, சீராட்ட.