2701. ரூக்ஷ = கரடு முரடான, சொரசொரப்பான, துவர்ப்பான, கலங்கிய, கடுமையான, அழுக்கு அடைந்த, குரூரமான, உலர்ந்துபோன, வறட்சியான.
2702. ரே = ஏய் (விளிக்கும் சொல்)
2703. ரேகா2 = கோடு, கீறல், வரிசை, வகுப்பு, முழுமை, திருப்தி, சித்திரம் வரையும் கோடு, உள்ளங்கை ரேகை.
2704. ரேசக: = மூச்சை வெளிவிடுதல்.
2705. ரேசனம் = காலி செய்தல், குறைவுபடுதல், மலம் கழித்தல், மூச்சை வெளிவிடுதல்.
2706. ரேணு: = தூசி, மகரந்தப்பொடி.
2707. ரேதஸ் = ஆண்மை, சுக்லநீர்.
2208. ரேப2: = அன்பு, கரகரப்பான சப்தம்.
2709. ரேவதீ = ஒரு நக்ஷத்திரத்தின் பெயர், பலராமனின் மனைவி.
2710. ரேவா = நர்மதை நதி.
2711. ரோக3: = வியாதி, நோய், பிணி.
2712. ரோசனா = பிரகாசமான, ஆகாயம், கோரோசனை, அழகான ஸ்த்ரீ.
2713. ரோத3ஸ் = ரோத3ஸீ = பூமியும், ஆகாயமும்.
2714. ரோத4ஸ் = கரை, ஓரம், அணை.
2715. ரோப: = நிர்மாணித்தல், அமைத்தல், செடி நடுதல், அம்பு, துளை, வெடிப்பு.
2716. ரோபித = அமைக்கப்பட்ட, நடப்பட, ஏற்றப்பட்ட, ஏறிய, நிர்மாணிக்கப்பட்ட.
2717. ரோமன் = மனிதன், விலங்கிகளின் உடலில் உள்ள சிறு மயிர்.
2718. ரோமாஞ்ச = ரோமஹர்ஷ = மயிர்கூச்சல்.
2719. ரோமாவலி: = ரோமாவலீ = ரோமராஜி = ரோமலதா = தொப்புளுக்கு மேல் வயிற்றுப் பகுதியில் மேல் நோக்கிச் செல்லும் மயிர் வரிசை.
2720. ரோமந்த: = அசை போடுதல்.