135. ராஹு: to ரூபம்

2681. ராஹு: = ஒரு கிரகம்.

2682. ரிக்த = காலியான, சூனியமான, பிரிக்கப்பட்ட, ஏழ்மையான.

2683. ரிபு: = எதிரி, வைரி.

2684. ரீதி: = முறை, ஒழுங்கு, நடை, ஆறு, பெருக்கு, எல்லை, பழக்கம்.

2685. ருக்ண = வளைந்த , உடைந்த, வீணான, உபயோகம் அற்ற, நோய் வாய்ப்பட்ட.

2686. ருசா = காந்தி, ஒளி, நிறம், அழகு, விருப்பம்.

2687. ருசி: = சுவை, ருசி, பிரகாசம், காந்தி, கிரணம், பசி, ஊக்கம், விருப்பம், தோற்றம், மகிழ்வு, இன்பம்.

2688. ருசிர = ருசியான, ஒளிநிறைந்த, இனிப்பான, அழகான, புஷ்டியான, மகிழ்ச்சி தரும்.

2689. ருஜா = உடைத்தல்,வியாதி, எலும்புமுறிவு, களைத்தல், வியாதி, துன்பம், வலி.

2690. ருத3னம் = ருதி3தம் = ரோத3னம் = அழுகை, அழுதல், கூக்குரல்.

2691. ருத்3ர: = ருத்திரன், சிவன், நெருப்பு, என் 11

2692. ருத்3ராக்ஷம் = ருத்திராக்ஷம்.

2693. ருத் 4 = தடுக்க, தேக்கி வைக்க, பிடித்து வைக்க, இடையூறு செய்ய, கட்டி வைக்க, பூட்டிவைக்க.

2694. ருதி4ரம் = இரத்தம், குங்குமப்பூ.

2695. ருஷ் = ருஷா = ரோஷ: = ரௌத்3ரம் = கோபம்.

2696. ரூடி4: = பிறப்பு, வளர்ச்சி, பெருக்கு, எழுச்சி, புகழ், பாரம்பர்யம், கெட்ட பெயர்.

2697. ரூபம் = உருவம், அமைப்பு, அழகு, குணம், லக்ஷணம், ரீதி, வகை, பிரதிபிம்பம்.

2698. ரூபகம் = வர்ணனை, ஒரு சொல்லணி, தோற்றம் , குறி, வகை, விதம், நாடகம், கேளிக்கை.

2699. ரூபக: = ரூப்யம் = ரூபாய்.

2700. ரூபம் = ரௌப்யம் = வெள்ளி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *