2641. ரவ: = அழுகை, கூச்சல், கர்ஜனை, கூவுதல், கலப்பான சத்தம்.
2642. ரவி: = சூரியன்.
2643. ரவிபுத்ர: = ரவிஸூனு: = சனி கிரகம், யமன், வாலி, சுக்ரீவன், கர்ணன்.
2644. ரச’னா = கயிறு, கடிவாளம், லகான், ஒட்டியாணம், இடைப்பட்டிகை.
2645. ரச்’மி = ஒளி, ஒளிக்கிரணம், கடிவாளம், கயிறு, சாட்டை.
2646. ரச்’மிமத் = சூரியன்.
2647. ரஸ: = சாரம், சாறு, திரவம், தண்ணீர், கள், சாராயம், பால், ருசி, இன்பம், விருப்பு, சுவை, வீரியம், பாதரசம், அழகு, விஷம், நாக்கு , அமிர்தம், ஆனந்தம்.
2648. ரஸனா = நாக்கு.
2649. ரஸாதலம் = பூமிக்குக் கீழே உள்ள ஏழு உலகங்களில் ஒன்று.
2650. ரஸால: = மா மரம், கரும்பு.
2651. ரஹஸ் = தனிமை, தனித்த இடம், ரகசியம், புணர்ச்சி.
2652. ரஹஸ்யம் = ரகசிய விஷயம் / கொள்கை / பேச்சு.
2653. ரஹித = விலக்கப்பட்ட, இல்லாத, தனியான.
2654. ரக்ஷக: = காவல்காரன், காப்போன்.
2655. ரக்ஷணம் = காப்பாற்றுதல், போஷித்தல்,
2656. ரக்ஷா = தாயத்து, முடிக்கயிறு, விபூதி.
2657. ராகா = பூர்ணிமை, அப்போதே புஷ்பவதியான பெண், சொறி சிரங்கு.
2658. ராக3: = ராகம், அழகு, கோபம், இன்பம், சந்தோஷம், காதல், பிரியம், சிவப்பு நிறம்.
2659. ராக4வ: = ராமன், பெரிய மீன், ரகு வம்சத்தினன்.
2660. ராஜன் = ராய: = அரசன், இந்திரன், சந்திரன், க்ஷத்திரியன், தலைவன்.