2621. ரஞ்ஜனம் = வர்ணம், வர்ணம் தீட்டுதல், மகிழ்வித்தல், சந்தோஷம் அடைதல்.
2622. ரடனம் = கத்துதல், கூச்சல் இடுதல்.
2623. ரண: = ரணம் = சண்டை, போர்.
2624. ரண்டா3 = விதவை, விலைமகள்.
2625. ரதம் = மகிழ்ச்சி, புணர்ச்சி.
2626. ரதி: = மகிழ்ச்சி, இன்பம், பிரியம், காதல், ஆசை, பெண்குறி, மன்மதனின் மனைவி .
2627. ரத்னம் = சிறந்த வஸ்து, ரத்தினம், விலை உயர்ந்தது.
2628. ரத்னாகர: = கடல், அரபிக்கடல்.
2629. ரத்னாவளி = இரத்தின மாலை, ஹர்ஷன் இயற்றிய ஒரு நாடகம்.
2630. ரத்னி: = முழங்கை, ஒரு முழ அளவு.
2631. ரத2: = தேர், வண்டி, வாஹனம், உடல், கால், அவயவம், பாதம்.
2632. ரதி2க: = ரதின் = ரதம் ஓட்டுபவன், ரதத்தில் சவாரி செய்பவன், ரதவீரன், ரதம் உடையவன்.
2633. ரத்2யா = ரதங்களின் கூட்டம், வண்டிகள் செல்லும் பாதை, ராஜ வீதி.
2634. ரந்த்4ரம் = துளை, துவாரம், வெடிப்பு, குற்றம், பலஹீனமான பகுதி.
2635. ரப4ஸ: = கொடுமை, வேகம், கோபம், ஆவல், துக்கம், சந்தோஷம், ஆனந்தம்.
2636. ரமண: = காதலன், கணவன், மன்மதன்.
2637. ரமணீய = பிரியமான, மனம் கவரும், அழகான.
2638. ரமா = லக்ஷ்மி, மனைவி, செல்வம்.
2639. ரம்பா4 = வாழை மரம், ஒரு அப்சரஸ்.
2640. ரம்ய = அழகான, மனம் கவர்ந்த, ருசியான, பிரியமான,மகிழ்ச்சி தரும்.