131. யோக்3யதா to ரஞ்சக:

2601. யோக்3யதா = திறமை, தகுதி, பொருளின் உபயோகத் தன்மை.

2602. யோஜனம் = சேர்த்தல், பிரயோகித்தல், சுமார் எட்டு மைல் தூரம்.

2603. யோத4: = போர் வீரன்.

2604. யோனி: = கர்பப்பை, தோற்றுவாய், பெண் குறி, தோன்றும் இடம், பிறப்பிடம்.

2605. யௌவனம் = இளமைப் பருவம்.

2606. யௌவராஜ்யம் = இளவரசுப் பட்டம்.

2607. ரக்த = சிவப்பான, வர்ணம் தீட்டப்பட்ட, பிரியமான, இனிய, இன்பமான.

2608. ரக்த: = ரக்தவர்ணம்.

2609. ரக்தம் = இரத்தம், தாமிரம், குங்குமம், சிந்தூரம், குங்குமப்பூ.

2610. ரக்தி: = பிரியம், பாசம், அன்பு, வசீகரிப்பு.

2611. ரகு4: = சூரிய வம்சத்தின் ஒரு அரசன்.

2612. ரங்க3:= வர்ணம், நாடக சாலை , சபை, போர்க்களம்.

2613. ரசனா = ஒழுங்கு முறை, தயாரிக்க, படைக்க, செய்ய, எழுத, உண்டாக்க, வைக்க, அலங்கரிக்க, திடப் படுத்த.

2614. ரஜக: = வண்ணான்.

2615. ரஜதம் = வெள்ளி, முத்துமாலை, ரத்தம், தந்தம், நக்ஷத்திரக் கூட்டம்.

2616. ரஜநி: = ரஜநீ = இரவு.

2617. ரஜநீகர: = ரஜநீபதி: = சந்திரன்.

2618. ரஜஸ் = புழுதி, தூசு, மகரந்தம், அறியாமை, மன இருள், விளை நிலம், பெண்களின் மாதவிடாய்.

2619. ரஜ்ஜு: = கயிறு, தலைப்பின்னல்.

2620. ரஞ்சக: = ஓவியக்காரன், வர்ணம் தீட்டுபவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *