241. க: = பிரம்மா, விஷ்ணு, மன்மதன், அக்னி, வாயு, யமன், சூர்யன், ஆன்மா, அரசன், மயில், மனம், பக்ஷி, உடல், காலம், மேகம், சொல், ஓசை, செல்வம்.
242. கங்கணம் = வளை, காப்பு, கங்கணம், திருமணத்தின் போது கையில் கட்டப்படும் கயிறு.
243. கங்காளம் = எலும்புக்கூடு.
244. கச்சம் = கரை, ஓரம் விளிம்பு, ஆடையின் கீழ்ப்பகுதி, கரையோரம், எல்லைப்பிரதேசம், சேறு.
245. கஞ்சுக: = போர்க்கவசம், பாம்புச்சட்டை, ஆடை, துணி, அங்கி, ரவிக்கை, மேலங்கி.
246. கஞ்ஜம் = தாமரை மலர், அம்ருதம்.
247. கடி2ன: = கடினமான, குரூரமான, இரக்கம் இல்லாத, கொடுமையான, கூர்மையான, உக்ரமான, முரட்டுத்தனமான .
248. கடோ2ர = திடமான, கெட்டியான, கூர்மையான, கடினமான, தயையற்ற, கல்நெஞ்சு படைத்த.
249. கண்ட2ம் = தொண்டை, கழுத்து, குரல், அருகாமை, குடத்தின் கழுத்துப் பகுதி.
250. கத2னம் = கதை சொல்லுதல், வர்ணனை செய்தல்.
251. கதா2 = கதை, கற்பனைக்கதை, கட்டுக்கதை, பேச்சு, உரையாடல், சம்பாஷணை.
252. கத3ம்ப3கம் = கூட்டம், கதம்ப மரத்தின் புஷ்பம்.
253. கத3லீ = வாழை மரம், ஒரு வகை மான், யானை சுமந்து செல்லும் கொடி, கொடி.
254. கனகம் = பொன், தங்கம்.
255. கனிஷ்ட2 = எல்லாவற்றிலும் சிறிய, மிகக் குறைந்த, வயதில் இளைய.
256. கனிஷ்டி2கா = சுண்டு விரல், கண்ணின் கருவிழி.
257. கந்தா2 = கந்தை, கிழிந்த துணி, ஒட்டுப் போட்டது, துறவிகளின் துணிப்பை.
258. கந்த3ர = குகை, பள்ளத்தாக்கு, அங்குசம்.
259. கந்த3ர்ப: = மன்மதன், காமம்.
260. கந்த4ர: = கழுத்து, நீருடன் கூடிய மேகம்