2561. யத்3ருச்சா2தாஸ்= எதிர்பாராமல்.
2562. யத்3ப4விஷ்ய: = விதிப்படி நடக்கும் என்னும் சோம்பேறி.
2563. யந்த்ரம் = உபகரணம்.
2464. யம: = புலன் அடக்கம்.
2565. யமுனா = யமுனை நதி.
2566. யவ: = யவை என்னும் தானியம்(பார்லி), வேகம்.
2567. யவன: = வெளி நாட்டவன், கிரேக்க நாட்டினன்.
2568. யச’ஸ் = புகழ், கீர்த்தி.
2569. யச’ஸ்வின் = புகழுடைய.
2570. யஷ்டி: = யஷ்டி = கைத்தடி, கதை, தூண், மலை, சரம்.
2571. யக்ஷ: = யக்ஷன், குபேரனின் சேவகன்.
2572. யக்ஷ்ம: = யக்ஷ்மன் = க்ஷய ரோகம், காச நோய்.
2573. யா = செல்ல, விட்டுப்போக, பின் வாங்க, யாசிக்க.
2574. யாக: = வேள்வி, யாகம், சடங்கு.
2575. யாச் = வேண்டிட, பிச்சை எடுக்க, தெரிவிக்க, பிரார்த்திக்க.
2576. யாசக: = பிச்சைக்காரன்.
2577. யாசனம் = யாசனா = பிரார்த்தனை, விண்ணப்பம், பிரார்த்தனை.
2578. யாத்ரா = பிரயாணம், உற்சவம், ஊர்வலம், முறை, வழக்கம், உலக வாழ்க்கை.
2579. யாத்ரிக: = பிரயாணி, யாத்திரிகன்.
2580. யாத்3ருஷ = யாத்3ருக்ஷ = எது போன்ற, எம்மாதிரியான.