127. மோஹனம் to யதி:

2521. மோஹனம் = மயக்குதல், மனம் கலங்கச் செய்தல், மோஹிக்கச் செய்தல்.

2522. மோஹினீ = ஒரு அப்சரஸ், விஷ்ணுவின் ஒரு அவதாரம்.

2523. மோக்ஷ: = வீடு பேறு, முக்தி, பேரின்பம், விடுதலை.

2524. மௌஞ்ஜீ = முஞ்ஜீ என்ற புல்லினால் திரிக்கப் பட்ட முப்புரி நூல்.

2525. மௌட்3யம் = முட்டாள்தனம், சிறு பிள்ளைத்தனம்.

2526. மௌனம் = வாய் பேசாது இருத்தல்.

2527. மௌர்வீ = வில்லின் கயிறு.

2528. மௌலி: = கிரீடம், தலை உச்சி மயிர், தலை.

2529. ம்ளான = வாடிய, பட்டுப்போன, மெலிந்த, பலஹீனமான, நாற்றமடைந்த, களைப்படைந்த.

2530. ம்ளானி: = வாட்டம், களைப்பு, துர்நாற்றம்.

2531. ய: = எவன், நடப்பவன், செல்பவன் காற்று, வண்டி, புகழ், ஒரு தானியம் (யவை)

2532. யஜ் = யாகம் செய்ய, பூஜை செய்ய அக்னியில் அர்பணிக்க.

2533. யஜமான : = குடும்பத் தலைவன், யஜமானன் , யாகம் செய்பவன்.

2534. யஜுஸ் = யஜுர் வேதம்.

2535. யக்ஞ : = யாகம், அக்னி தேவன், விஷ்ணுவின் ஒரு பெயர், பூஜை காரியம், யாக காரியம்.

2536. யஜ்வன் = யாகம் செய்பவன்.

2537. யத் = உழைக்க, முயற்சி செய்ய.

2538. யதஸ் = எதிலிருந்து, எதனால், எங்கிருந்து, எதன் காரணமாக, ஆகையால், அப்படியாக.

2539. யதி: = துறவி.

2540. யதி: = தடை, நிறுத்தம், தங்குதல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *