2481. மூர்ச்ச2னம் = மூர்ச்சை அடைதல், மயக்கம் அடைதல், இசையில் ஸ்வரங்களின் ஒரு பிரயோகம்.
2482. மூர்த்தி: = உருவம், உடல், தெய்வங்களின் சிலை.
2483. மூர்த4ன் = நெற்றி, தலை, புருவம், சிகரம், தலைவன், முக்கியமானவன்.
2484. மூலம் = வேர், அடிப் பகுதி, ஆதாரம், ஆரம்பம், மூலம், உற்பத்திப் பகுதி, மூல நட்சத்திரம், மூல தனம், சமீபம்.
2485. மூலிகா= வேர், மூலிகை மருந்து.
2486. மூல்யம்= மௌல்யம் = விலை, சம்பளம், கூலி, லாபம்.
2487. மூஷ: = எலி, சுண்டெலி.
2488. மூஷக: = மூஷிக: = மூஞ்சூறு, எலி, திருடன்.
2489. ம்ருக3: = நாலுகால் பிராணி, மான், கஸ்தூரி, மிருக சீருஷ நட்சத்திரம்.
2490. ம்ருக3யா = வேட்டையாடுதல்.
2491. ம்ருக3யு: = வேட்டையாடுபவன்.
2492. ம்ருட3: = சிவன்.
2493. ம்ருடா3 = ம்ருடீ3= ம்ருடா3ணீ = பார்வதி.
2494. ம்ருத = வீணான, இறந்து போன.
2495. ம்ருதீ: = இறப்பு.
2496. ம்ருத்திகா = மண்.
2497. ம்ருத்யு: = யமன்.
2498. ம்ருத3ங்க3: = மிருதங்கம்.
2499. ம்ருது3 = ம்ருது3ல = மிருதுவான, வழவழப்பான.
2500. ம்ருஷா = வீணாக, பொய்யாக.