123. மிதி: to முக்தி:

2441. மிதி: = அளவு, எடை, பிரமாணம், அறிவு.

2442. மித்ர: = சூரியன்.

2443. மித்ரம் = நண்பன்.

2444. மிதுனம் = ஜோடி, இரட்டை, கூடுதல், மிதுன ராசி.

2445. மித்யா = பொய்யாக, பலன் இல்லாத.

2446. மிச்’ர = கலந்த, சேர்த்த, பலவிதமான.

2447. மிஷ்ட = நனைந்த, இனிப்பான.

2448. மிஹிர: = சூரியன், சந்திரன், மேகம், காற்று, கிழவன்.

2449. மீன: = மீன், மீன ராசி.

2450. மீமாம்ஸா = ஆராய்ச்சி, ஒரு சாஸ்திரம்.

2451. மீலனம் = பூக்கள் மூடிக் கொள்ளுதல், கண்களை மூடிக் கொள்ளுதல்.

2452. முகுந்த3: = விஷ்ணு, பாதரசம், ஒரு ரத்தினம், குபேரனின் ஒரு நிதி.

2453. முகுர: = மொக்கு, மல்லிகைக்கொடி, முகம் பார்க்கும் கண்ணாடி.

2454. முகுல: = மொட்டு.

2455. முகுலம் = மொட்டு.

2456. முகுலித = மொட்டுக்களை உடைய, பாதி மூடப்பட்ட.

2457. முக்த = விடுபட்ட, மோக்ஷம் அடைந்த,விடுதி பெற்ற, கை விடப்பட்ட.

2458. முக்த: = முக்தி அடைந்தவன்.

2459. முக்தா = மௌக்திகம் = முத்து, விலைமாது.

2460. முக்தி: = மோக்ஷம், சுதந்திரம், விடுதலை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *