2421. மாயா = கபடம், தந்திரம், ஜாலம், கற்பனை, மாயை.
2422. மார: = கொலை, மன்மதன், அன்பு, காமம், தடை, இடையூறு.
2423. மாரக: = கொலை செய்பவன், மன்மதன், ராஜாளி, கொடிய நோய்.
2424. மாரணம் = அழித்தல், கொலை செய்தல்.
2425. மாருத: = காற்று, வாயு, பிராணன், வாதம்.
2426. மாருதி = மாருதஸூனூ = மாருதாத்மஜ = அனுமன், பீமன்.
2427. மார்கண்ட3 = மார்கண்டே3ய = ஒரு முனிவர்.
2428. மார்க3 = சாலை, வழி, வழக்கம், மலத்துவாரம், கஸ்தூரி, மார்கழி மாதம், காயத்தின் வடு.
2429. மார்க3சிர: = மார்க3சிரஸ் = மார்க3சீர்ஷ: = மார்கழி மாதம்.
2430. மார்ஜனம் = சுத்தம் செய்தல், தூய்மைப்படுத்துதல்.
2431. மர்ஜநீ = துடைப்பம்.
2432. மார்ஜர: = மார்ஜால: = பூனை.
2433. மார்ததண்ட3: = மார்த்தாண்ட3: = சூரியன், எருக்கஞ்செடி, எண் பன்னிரண்டு.
2434. மார்த3வம் = மிருதுத் தன்மை.
2435. மாலா = மாலை, வரிசை, கூட்டம்.
2536. மாலிகா = மாலை, வரிசை, மல்லிகை, மகள், மாளிகை, அரண்மனை.
2437. மாஷ: = உளுந்து, 5 அல்லது 10 குந்துமணி எடைத் தங்கம், மூடன்.
2438. மாஹாத்ம்யம் = மகிமை.
2439. மாஸ் = மாஸ: = மாஸம் = மாதம்.
2440. மித = அளவான, கொஞ்சமான, வரம்புக்கு உட்பட்ட, மிதமான.