12. ஏகவேணி to ஔபம்யம்

221. ஏகவேணி = ஒற்றைப் பின்னல் (கணவனைப் பிரிந்து இருக்கும் பெண்ணைக் குறிக்கும்).

222. ஏகாத3சி’ = சந்திர மாதத்தின் இரு பக்ஷங்களிலும் பதினோராவது நாள், விஷ்ணுவுக்கு உகந்த விசேஷ நாள், விரத நாள்.

223. ஏலா = ஏலக்காய் செடி அல்லது விதை.

224. ஐகபத்யம் = ஒரே ஆளுகை, ஒரே எஜமானனாக இருத்தல், எல்லாவற்றுக்கும் மேலான சக்தி.

225. ஐகமத்யம் = அபிப்பிராய ஒற்றுமை, ஒரே விதமான எண்ணம்.

226. ஐக்யம் = ஒற்றுமை, இணக்கம், ஒன்றிய தன்மை, வேற்றுமை இல்லாமை.

227. ஐதிஹாஸிக = பரம்பரையாகப் பெற்ற, இதிஹாச சம்பந்தமான.

228. ஐச்’வர்யம் = பிரபுத்வம், வலிமை, மேன்மை, சக்தி, செல்வம், செழிப்பு, வல்லமை.

229. ஓஜஸ் = உடல் வலிமை, வலிமை, சக்தி, வீர்யம், ஆண்மை, காந்தி, ஒளி, தண்ணீர், இலக்கிய நடையின் விஸ்தாரம்.

230. ஓத3னம் = உணவு, சோறு, குருணையைப் பாலில் வேக வைத்த சாதம்.

231. ஓம் = புனித அக்ஷரம், பிரணவம், மங்கள வார்த்தை, பிரமம், வேத பாடங்களிலும் அர்ச்சனை ஆராதனைகளிலும் உபயோகப்படும் சொல்.

232. ஓ ஷதீ4 = மூலிகை, தாவரம், பச்சிலை, மருந்து.

233. ஓஷ்ட2: = மேலுதடு அல்லது கீழுதடு.

234. ஔசித்யம் = தகுந்தது, பொருத்தமானது.

235. ஔத்ஸுக்யம் = கவலை, அமைதியின்மை, ஆசை, ஆர்வம், ஊக்கம், சிரத்தை.

236. ஔதா3ர்யம் = உதாரத் தன்மை, தாராள மனப்பான்மை, பெருந்தன்மை, உயர்ந்த தன்மை.

237. ஔபகார்யம் = இருப்பிடம், வசிக்கும் இடம், கூடாரம்.

238. ஔபநிஷத = உபநிஷதங்களில் போதிக்கப்பட்ட, வேதங்களில் விதிக்கப்பட்ட, ஆன்மீகமான.

239. ஔபாஸந: = க்ருஹஸ்தன் தன் வீட்டில் வணங்கும் புனித அக்னி.

240. ஔபம்யம் = சமநிலை, ஒப்பு, ஒன்று போன்ற தோற்றம்.

2 thoughts on “12. ஏகவேணி to ஔபம்யம்

    • Dear Brother,
      Namaste! 🙂
      It is more for my own sake – than for the sake of the others that –
      this blog was created. The only way to learn a thing is to learn it first and teach it/ tell it to the others!
      I did exactly the same thing. 🙂
      Welcome to my website with more assorted blogs on varied subjects.
      http://visalakshiramani.weebly.com/
      Thank you for your feedback and the encouraging words!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *