119. மல்லிகா to மஹாநஸ:

361. மல்லிகா = மல்லிகைப்பூ.

2362. மஸி: = மஸீ = பேனா மை, கண் மை.

2363. மஷி: = மஷீ = பேனா மை, கண் மை.

2364. மஸுர: = மஸூர: = தலையணை.

2365. மஸ்கரின் = துறவி, சந்திரன்.

2366. மஸ்தக: = மஸ்தகம் = தலை, நெற்றி, உச்சி.

2367. மஹ: = உத்சவம், யாகம், பிரகாசம், எருமை.

2368. மஹத் = பெரிய, பருத்த, அதிகமான, உயர்ந்த, மேலான, மஹத்வம் உள்ள.

2369. மஹத் = மகிமை வாய்ந்த, பெரியவன், ஒட்டகம், சிவன், மஹத் தத்வம், புத்தி தத்வம்.

2370. மஹதீ = நாரதரின் வீணை, மகிமை.

2371. மஹத்வம் = மேன்மை, சக்தி, பெருமை, விஸ்தாரத் தன்மை.

2372. மஹனீய = மரியாதைக்கு உரிய, பூரணமான, புகழுடைய, மேன்மை தாங்கிய.

2373. மஹா = பெரிய.

2374. மஹரிஷி = மஹா முனி = புகழ் வாய்ந்த முனிவர்.

2375. மஹாகவி: = சிறந்த கவிஞன்.

2376. மஹாகாய: = யானை, சிவன், விஷ்ணு, நந்தி.

2377. மஹாஜன: = மக்கள் கூட்டம்.

2378. மஹாத்மன் = மகாத்மா.

2379. மஹாதே3வ: = சிவன்.

2380. மஹாநஸ: = சமையல் அறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *