2341. மம = மே = என்னுடைய.
2342. மமதா = கர்வம்.
2343. மய: = அசுரர்களின் சிற்பி மயன், ஒட்டகம், குதிரை, கோவேறு கழுதை.
2344. மயூக2: = ஒளிக் கிரணம், அழகு, ஒளி, காந்தி.
2345. மயூர: = மயில், ஒரு மலர், ஒரு கவியின் பெயர்.
2346. மரகதம் = மரகதக் கல்.
2347. மரணம் = சாவு.
2348. மரால: = அன்னப் பறவை, வாத்து, மேகம், குதிரை, வஞ்சகன், மாதுளைத் தோட்டம்.
2349. மரீசம் = மிளகு.
2350. மரீசி: = ஒளிக் கிரணம்.
2351. மரு: = பாலைவனம், மலை.
2352. மருத் = காற்று, வாயு தேவன், கடவுள், தேவதை, மருதாணிச் செடி.
2353. மர்கட: = குரங்கு, சிலந்தி, விஷம்.
2354. மர்த்ய: = மனிதன், மண்ணுலகு.
2355. மர்மன் = உயிர் நிலைப்பகுதி, மறை பொருள், குறை, ரஹசியமானது,
2356. மர்யாதா3 = எல்லை, ஒழுங்கு, முறை, முடிவு, கெளரவம், மரியாதை.
2357. மல: = அழுக்கு, அசுத்தம், சாணம், மலம்.
2358. மலின =அழுக்கான, அசுத்தமான, தோஷமுள்ள, மட்ட ரகமான.
2359. மலினம் = பாபம், குற்றம், மோர்.
2360. மல்ல: = பலம் உள்ளவன், மல் யுத்தம் செய்பவன், கன்னம், குடிக்கும் பாத்திரம்.