2321. மனோரத2: = ஆசை, விருப்பம்.
2322. மனோஞ= மனோரம = மனோஹர = மனத்தைக் கவரும், அழகான, இனிமையான.
2323. மனஸ்வின் = புத்திசாலியான, கெட்டிக்கார, திட புத்தியுள்ள, தாரள மனமுள்ள, பெருந்தன்மையுள்ள.
2324. மனாக் = கொஞ்சம், மெல்ல, மெல்ல, சிறிது மாத்திரம், தாமதமாக.
2325. மனீஷா = விருப்பம், அறிவு, எண்ணம்.
2326. மனு: = மனிதன், மனித இனம், மனித இனத்தின் முதலவன், பூவுலகின் பதினான்கு அதிபதிகளில் ஒருவன்.
2327. மனூஜ: = மனுஷ்ய: = மனிதன்.
2328. மந்த்ர: = மந்திரம், ஆலோசனை, உபதேசம், வேத சம்ஹிதை.
2329. மந்த்ரின் = மந்த்ரி: = அமைச்சன், மந்திரி.
2330. மந்த2ர: = பொக்கிஷம், தலை மயிர், வெண்ணை, மது, கோபம், ஒற்றன், மந்தர மலை, மான், பழம், வைசாக மாதம்.
2331. மந்த3 = மந்தமான, தாமதமான, சோம்பேறியான, மூடமான, மிருதுவான, குறைவான.
2332. மந்த3: = சனி கிரகம்.
2333. மந்த3ம் = மந்தமாக. மெள்ள, கிரமமாக, செல்லச் செல்ல.
2334. மந்த3ர: = மந்தர மலை, கண்ணாடி, சுவர்க்கம், மந்தார மரம்.
2335. மந்தா3கினி = கங்கை நதி, ஆகாச கங்கை.
2336. மந்தா3ர: = மந்தார மரம், எருக்கஞ்செடி, சுவர்க்கம், யானை.
2337. மந்தி3ரம் = இருப்பிடம், மாளிகை, பட்டணம், கோயில்.
2338. மன்மத2: = மன்மன : = காமதேவன்.
2339. மன்யு: = கோபம், துன்பம், வேள்வி, அக்னி.
2340. மம = மே = என்னுடைய.