116. மதி2ன் to மனஸிஜ:

2301. மதி2ன் = மத்து, காற்று, மேகங்களின் கர்ஜனை, இடி, ஆண் குறி.

2302. மத3: = குடி போதை, பைத்தியம், மதம் பிடித்தல், கர்வம், ஆசை, காம வெறி, தேன், அதிக மகிழ்ச்சி, கஸ்தூரி , வீரியம்.

2303. மத3ன: = மன்மதன், காதல், தேன் வண்டு, மகிழ மரம், காம விகாரம், இளவேனில் காலம்.

2304. மதா3ர: = மதம் பிடித்த யானை, பன்றி, காதலன், காமுகன், ஊமைத்தைச் செடி.

2305. மதி3ரா = சாராயம், கள்.

2306. மதீ3ய = என்னுடைய.

2307. மது4 = இனிப்பான, ருசியான.

2308. மது = தேன், மதுபானம், பூந்தேன், சாராயம், சர்க்கரை, தித்திப்பு.

2309. மது4: = வசந்த காலம், ஒரு அரக்கனின் பெயர், ஒரு மாதத்தின் பெயர்.

2310. மது4கர: = மது4லிஹ: = வண்டு.

2311. மது4ர = இனிப்பான, இன்ப தரும், ருசியான, பிரியமான.

2312. மது4ரம் = இனிப்பான.

2313. மத்4ய = நடு, மையத்தில் உள்ள, இடையில் உள்ள.

2314. மத்4ய: = மத்4யம் =மையப் பகுதி, கேந்திர ஸ்தானம், இடுப்பு, வயிறு, இடை, இடைவெளி.

2315. மத்4யமா = நடு விரல், திருமண வயது வந்த பெண்.

2316. மத்4யாஹ்ன = நடுப் பகல்.

2317. மத்4யே = நடுவில், இடையில்.

2318. மனனம் = நினைத்தல், ஞாபகம், அறிவு, ஊகம், அனுமானம், தியானம், புரிந்து கொள்ளுதல்.

2319. மனஸ் = மனம், இதயம், எண்ணம், விருப்பம், உணர்வு, அபிப்பிராயம்.

2320. மனஸிஜ: = மனோப4வ: = மன்மதன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *