115. மஞ்ச: to மத2னம்

2281. மஞ்ச: = கட்டில், ஆசனம்.

2282. மஞ்ஜரி: = மஞ்ஜரீ = முளை, தளிர், பூங்கொத்து, கொடி, முத்து.

2283. மஞ்ஜீர: = மஞ்ஜீரம் = கால் சதங்கை, காலில் பூணும் நகை.

2284. மஞ்ஜு = மஞ்ஜுள = அழகான, பிரியமான, மனத்தை ஈர்க்கும், இனிமையான, இன்பமான.

2285. மஞ்ஜூஷா = பெட்டி, கல்.

2286. மட2: = மடம், துறவிகள் வசிக்கும் இடம்.

2287. மணி: = ரத்தினம், உயர்ந்தது, ரத்தினம் இழைக்கப்பட்ட அணிகலன்கள், காந்தக்கல்.

2288. மண்ட3: = மண்ட3ம் = காஞ்சி, பாலின் ஆடை, நுரை.

2289. மண்ட3: = நகை, அலங்காரம், தவளை, ஆமணக்குக் செடி.

2290. மண்ட3ப: = மண்டபம்.

2291. மண்ட3லம் = உருண்டையான பொருள், வட்டம், சக்கரம், கூட்டம், சமுதாயம், பிரதேசம், தொடுவானம்.

2292. மண்டி3த = அலங்கரிக்கப்பட்ட.

2293. மண்டூ3க: = தவளை.

2294. மதம் = எண்ணம், அபிப்பிராயம், நம்பிக்கை, கொள்கை, முடிவு, மதம், அறிவு.

2295. மதங்க: = யானை, மேகம், ஒரு முனிவரின் பெயர்.

2296. மதி: = புத்தி, அறிவு, மனம், கருத்து, எண்ணம், நினைவு.

2297. மத்த = மதம் கொண்ட, பைத்தியம் பிடித்த, கர்வம் கொண்ட, குடி போதையில் உள்ள.

2298. மத்ஸ: = மத்ஸ்ய: = மீன்.

2299. மத்ஸர: = பொறாமை, கோபம், துவேஷம், கர்வம், விரோதம்.

2300. மத2னம் = கடைதல், அழித்தல்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *