2261. ப்4ராந்தி: = பிழை, பிரமை, பொய்யான எண்ணம், அல்லது காட்சி, சஞ்சலம், குழப்பம்.
2262. ப்4ருகுடி: = ப்4ருகுடீ = ப்4ரூகுடி: = ப்4ரூகுடீ = புருவங்களை நெரித்தல்.
2263. ப்4ரூ = புருவம்.
2264. ப்4ரூண: = கர்ப்பம், குழந்தை.
2265. மகர: = முதலை, கடல் மீன், மகர ராசி.
2266. மகரகுண்ட3லம் = முதலையின் வடிவில் அமைந்த காதணிகள்.
2267. மகரத்4வஜ: = மன்மதன், படையின் அணிவகுப்பு, ஒரு வித மருந்து.
2268. மகரந்த3: = பூந்தேன், ஒரு வகை மல்லிகை, குயில், வண்டு, ஒரு வாசனை நிறைந்த மரம்.
2269. மகுடம் = கிரீடம், சிகரம்.
2270. மகுர: = கண்ணாடி, மகிழமரம், மொட்டு.
2271. மக2: = யாகம்.
2272. மக3த4: = ஒரு பண்டைய ராஜ்ஜியம், துதிப் பாடல்கள்.
2273. மக்3ன = மூழ்கிய.
2274. மக3வ: = மக3வன் = மக3வத் = இந்திரன்.
2275. மகா3 = ஒரு நக்ஷத்திரம் – மகம்.
2276. மங்க3ல = சுபமான, மங்களமான.
2277. மங்க3ளம் = சுபம், அதிருஷ்டம், நல் வாழ்த்து, உத்சவம், சுப காரியம்.
2278. மங்க3ள: = செவ்வாய்.
2279. மச்ச2: = மீன்.
2280. மஜ்ஜா = உடலில் உள்ள கொழுப்பு.