113. பே4க: to ப்4ராத்ரு:

2241. பே4க: = தவளை, மேகம், பயந்த மனிதன்.

2242. பே4ட3: = செம்மறியாடு, தெப்பம்.

2243. பே4த3: = வித்தியாசம், உடைத்தல், பிளப்பு, பிளவு, உடைத்தல், தோல்வி, பிரிதல், உபயம், தந்திரம், விகாரம், மாறுபாடு.

2244. பே4ரீ = பேரிகை. போர் முரசு.

2245. பே4ஷஜம் = மருந்து, சிகித்சை.

2246. பை4ரவ: = சிவனின் பயம் தரும் உருவம்.

2247. பை4ரவீ = துர்க்கை, காளி, ஒரு ராகத்தின் பெயர்.

2248. போ4க3: = சுகம் அடைதல், சுகம் அனுபவித்தல், உண்ணுதல், நைவேத்யம், பாம்பு, பாம்பின் படம், லாபம், உடல், செல்வம்.

2249. போ4க்3யம் = அனுபவிக்கத் தக்க பொருள், நெல், தானியம், செல்வம்.

2250. போ4ஜனம் = சாப்பிடுதல், உணவு, அனுபவித்தல், உபயோகித்தல்.

2251. போ4ஜ்யம் = சாப்பாடு, உணவு.

2252. பௌ4திக: = உயிர் வாழும் பிராணிகளுடன் தொடர்புடைய, பஞ்ச பூதங்களைச் சார்ந்த.

2253. பௌ4ம = செவ்வாய், தண்ணீர், ஆகாயம், ஒளி, வெளிச்சம், நரகாசுரன்.

2254. ப்4ரம்ச’: = விழுதல், வீழ்ச்சி, அழிவு, குறைவு,

2255. ப்4ரம: = அலைந்து திரிதல், சிக்கல், தன்னைத் தானே சுற்றுதல், சுற்று, சுழல், பிசகு, தவறு, மயக்கம், கலக்கம், பொய்யான காட்சி.

2256. ப்4ரமணம் = தலை சுற்றல், உல்லாச யாத்திரை, மயக்கம், குழப்பம், ஸ்திரமற்ற தன்மை.

2257. ப்4ரமர: = வண்டு, தேன் வண்டு, காதலன், காமம் கொண்டவன், குயவனின் சக்கரம், யுவன்.

2258. ப்4ரமி: = சுற்றுதல், திரிதல், தவறு, குயவனின் சக்கரம், சுழல்.

2259. ப்4ரஷ்ட = வீழ்ச்சியடைந்த, கெட்ட நடத்தையுள்ள, அபகரிக்கப்பட்ட.

2260. ப்4ராத்ரு: = உடன் பிறந்தவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *