112. பூ4 to ப்4ருச’ம்

2221. பூ4 = இருக்க, உயிர்வாழ, வசிக்க, நிகழ, உதயமாக, உண்டாக, பிறக்க, தங்க, உதவி அளிக்க.

2222. பூ4: = பூமி, உலகம், தரை, நிலம், இடம், நிலச் சொத்து.

2223. பூ4த = உண்டான, இருந்துவரும், உள்ளபடி உண்மையான, சென்ற, கழிந்த, கலந்த.

2224. பூ4தபூர்வ = பழைய, முன்னிருந்த.

2225. பூ4தம் = பிராணி, மனிதன், விலங்கு, தாவரம், பிசாசு, உலகம், பஞ்ச பூதங்கள்.

2226. பூ4தி: = இருப்பு, பிறப்பு, இன்பம், செல்வம், மகிமை, கெளரவம், விபூதி, அலங்காரம், தவ வலிமை.

2227. பூ4திகாம = செல்வச் செழிப்பை விரும்பும்.

2228. பூ4பதி: = பூ4பால: = பூ4மிபதி: = பூ4மிபால: = அரசன்.

2229. பூ4புத்ர: = பூ4ஸுத: = பூ4மிஜ: = பூ4மிஸுத: = செவ்வாய்
கிரஹம்.

2230. பூ4மி: = பூ4மீ = தரை, நிலம், இடம், மண், எல்லை, நாடு.

2231. பூ4மிகா = தரை, மண், நிலம், இடம், புத்தகத்தின் முகவுரை.

2232. பூ4யஸ் = அதிகமான, மறுபடியும், மறுபடியும், அடிக்கடி.

2233. பூ4யிஷ்ட = மிக அதிகமான, பலவான, பெரிய, முக்கியமான.

2234. பூ4ஷணம் = ஆபரணம், அலங்கரிப்பு.

2235. பூ4ஷித = அலங்கரிக்கப்பட்ட.

2236. ப்4ருகு3: = ஒரு முனிவரின் பெயர், கிருஷ்ணன், சுக்கிரன், சுக்கிராச்சாரியார்.

2237. ப்4ருங்க3: = கருவண்டு, ஒரு வகைப் பறவை, காமவெறி கொண்டவன்.

2238. ப்4ருத = சுமக்கப்பட்ட, தாங்கப் பட்ட, காப்பற்றப்பட்ட, போஷிக்கப்பட்ட, நிரப்பப்பட்ட.

2239. ப்4ருத்ய = வேலையாள், தொண்டன்.

2240. ப்4ருச’ம் = அதிகமான, அநேகமான, நல்லதாக, மேன்மையாக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *