2201. பா4ஸ்வர: = சூரியன், தினம்.
2202. பி4த்தி: = சுவர், துண்டு, அம்சம், பாய்.
2203. பி4தா3 = உடைதல், பிழைப்பு, வகை, முறை, விதம்.
2204. பி4ன்ன: = துண்டாக்கப்பட்ட, உடைக்கப்பட்ட, பிரிக்கப்பட்ட, தனியான, விரிந்த, இல்லாதுபோன, பலவிதமான.
2205. பி4ன்னம் = துண்டு, துளி.
2206. பி4ஷஜ் = பிஷக் = வைத்தியன்.
2207. பி4க்ஷா = பிச்சை, யாசித்தல்.
2208. பி4க்ஷு: = பிக்ஷுக: = சாமியார், துறவி , பிச்சைக்காரன்.
2209. பீ4: = பீதி: = பயம், ஐயம், நடுக்கம்.
2210. பீ4த = பயந்த, நடுங்கிய.
2211. பீ4ம : = சிவனின் ஒரு பெயர், இரண்டாவது பாண்டவன்.
2212. பீ4ஷ்ம = பீ4ஷண = பயம் உண்டு பண்ணும், பயங்கரமான.
2213. பீ4ஷ்ம: = அரக்கன், பிசாசு, சிவன், சந்தனுவின் மகன்.
2214. பு4க்த = அனுபவிக்கப்பட்ட, சாப்பிடப்பட்ட.
2215. பு4ஜ : = தோள், கையின் மேல்பகுதி, மடிப்பு, வளைவு,
யானையின் துதிக்கை, முக்கோணத்தின் அடிக்கோடு.
2216. பு4ஜக3: = பு4ஜங்க3ம் = நல்ல பாம்பு.
2217. பு4ஜங்க3: = பாம்பு, பிரபு, எஜமானன், கணவன், காதலன்,
2218. பு4வனம் = உலகம், பூமி, சுவர்க்கம், மனித இனம், தண்ணீர், பிராணிகள்.
2219. பு4வனத்ரயம் = சுவர்க்கம், பூமி, பாதாளம் ஆகிய மூன்றும் சேர்ந்தது.
2220. பு4வர் = பு4வஸ் = ஆகாயம்.