110. பா4க்3யம் to பா4ஸ

2181. பா4க்3யம் = அதிர்ஷ்டம், தலைவிதி, ஆனந்தம், சுபம், மங்களகரம், செழிப்பு, ஐச்வர்யம், செல்வம்.

2182. பா4ஜ = பங்கு பெறும், அனுபவிக்கும், வைத்திருக்கும், வசிக்கின்ற, செய்யத் தக்க.

2183. பா4ஜனம் = பாத்திரம், அங்கு, இருப்பிடம்.

2184. பா4ஜ்யம் = பாகம், அம்சம், முன்னோர்களின் சொத்தில் பங்கு.

2185. பா4ண்டம் = மட்பாண்டம், பாத்திரம், விலைப் பொருள், பொருள்.

2186. பா4ண்டா3ரம் = பண்டகசாலை.

2187. பா4னு: = சூரியன்,கிரணம், காந்தி, அரசன், நாள்.

2188. பா4மினீ = அழகிய இளம் பெண்.

2189. பா4ர: = சுமை, எடை, பொறுப்பு.

2190. பா4ரதம் = வியாசரின் மஹா பாரதம், பாரத தேசம்.

2191. பா4ரத்3வாஜ: = துரோணாச்சாரியார், அகத்தியர், பாரத்வாஜ முனிவர், வானம் பாடி.

2192. பா4ர்யா = மணம் புரிந்துகொண்ட மனைவி.

2193. பா4வ: = இருப்பு, நிலை, உண்மை, எண்ணம், மனம், காதல், ஆசை, பற்று, சிந்தனை, தியானம்.

2194. பா4வித = நினைக்கப்பட்ட, தியானிக்கப்பட்ட, போஷிக்கப்பட்ட, நிரூபிக்கப்பட்ட, வெளிப்பட்ட.

2195. பா4வுக = உடன் பிறந்தவளின் கணவன்.

2196. பா4ஷணம் = பேசுதல், பேச்சு, சொல்.

2197. பா4ஷா = மொழி, பேச்சு, சரஸ்வதி.

2198. பா4ஷித = சொல்லப்பட்ட, பேசப்பட்ட, உச்சரிக்கப்பட்ட.

2199. பா4ஷ்யம் = விரிவுரை, பேசுதல்.

2200. பா4ஸ: = ஒளி, காந்தி, சேவல், கழுகு, ராஜாளி, மாட்டுக் கொட்டில், ஒரு கவிஞனின் பெயர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *