11. உரக3: to ஏகபத்னி

201. உரக3: = பாம்பு, நல்ல பாம்பு, நாகப்பாம்பு, புராணங்களில் வரும் மனித முகம் கொண்ட பாம்பு.

202. உரஸ = மார்பு, மார்பகம்.

203. உரூ = விசாலமான, புகழுடைய, மேலான, பெரிய, அதிசயமான, அதிகமான.

204. உர்வாரூ: = ஒரு வகை கக்கரிக்காய், வெள்ளரிக்காய்.

205. உலூக: = ஆந்தை, இந்திரன், ஒரு முனிவரின் பெயர்.

206. உல்லாஸ: = ஆனந்தம், மகிழ்ச்சி, பிரசாகம், காந்தி. ஒரு சொல் அணி, புத்தகத்தின் ஒரு பாகம்.

207. உல்லேக2னம் = தேய்த்தல், துருவுதல், தோண்டுதல், குறிப்பிடல், வாந்தி எடுத்தல், மேற்கோள், எழுதப்பட்டது, சித்திரம்.

208. உ ஷஸ் = பொழுது விடியும் காலம், விடியற்காலை, காலை வெளிச்சம், ஸந்த்யா தேவி.

209. உஷ்ண = சூடான, உஷ்ணமான, கூர்மையான, காரமான, கெட்டிக்கார, சாமர்த்தியம் நிறைந்த, கோபமுள்ள.

210. ஊன = குறைவான, குறைந்த, பலக்குறைவான, கீழ் ரகமான.

211. ஊரூ = தொடை.

212. ஊர்ஜித = சக்திவாய்ந்த, திடமான, வலிமையான, மரியாதைக்குரிய, மேலான, அழகான, உயர்ந்த, பெருமை வாய்ந்த.

213. ஊர்த்4வ: = நேரான, மேல்நோக்கிய, எழுந்து நிற்கும், உயரமான, நேர்த்தியான, கிழிந்த, பிய்ந்துபோன.

214. ஊஹ: = ஊகித்தல், அனுமானம் செய்தல், சோதித்தல், வாதித்தல், பூர்த்தி செய்தல், நோக்குதல்.

215. ருஜு = நேர்மையான, நாணயமான, கபடமற்ற, அனுகூல, நல்ல.

216. ருணம் = கடன், கடமை (தேவர்கள், முனிவர்கள், பித்ருக்கள் ஆகியவர்களுக்கு செய்ய வண்டிய கடமைகள்), கடமை உணர்ச்சி, கழித்தல் குறி, கோட்டை, தண்ணீர்.

217. ருது: = பருவ காலங்கள், யுக ஆரம்பம், உசிதமான சமயம், காந்தி, ஒளி, எண் ஆறைக் குறிப்பது.

218. ருஷப4: = எருது, காளைமாடு, சங்கீதத்தில் ஒரு ஸ்வரத்தின் பெயர், பன்றியின் வால், முதலையின் வால்.

219. ஏகத3ந்த: = விநாயகர், பிள்ளையார்.

220. ஏகபத்னி = பதிவிரதை, கற்புடைய பெண்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *