109. ப4ரித to பா4கீ3ரதீ

2161. ப4ரித = நிரம்பிய, போஷிக்கப்பட்ட, ஆதரிக்கப்பட்ட.

2162. ப4ர்க3: = சிவன், பிரம்மா, ஒளி.

2163. ப4த்ரு = கணவன், பிரபு, தலைவன், யஜமானன், காப்பவன்.

2164. ப4ர்த்ஸனம் = பயமுறுத்துதல், மிரட்டுதல், நிந்தித்தல், வசை கூறுதல், சாபமிடுதல்.

2165. ப4ல்லுக: = ப4ல்லூக: = கரடி, நாய்.

2166. ப4வ: = பிறப்பு, உண்டாகுதல், மூல காரணம், நலம், சுகம், செல்வம், செழுமை, சிறப்பு, அடைதல், கடவுள், சிவன்.

2167. ப4வான் = தாங்கள் (படர்க்கை, முன்னிலை, ஆண் பால், மரியாதையைக் குறிக்கும் சொல்)

2168. ப4வதி = தாங்கள் ( படர்க்கை, முன்னிலை, பெண் பால், மரியாதையைக் குறிக்கும் சொல்)

2169. ப4வனம் = இருத்தல், உண்டாதல், பிறப்பு, வீடு, மாளிகை, இருப்பிடம்.

2170. ப4வானீ = பார்வதி, பவானீ.

2171. ப4வித்ரு = ப4விஷ்ய = எதிர்காலத்தில் வரக்கூடிய.

2172. ப4ஸ்மம் = சாம்பல், விபூதி.

2173. ப4க்ஷணம் = உணவு, சாப்பாடு.

2174. ப4க்ஷ்யம் = சாப்பிடக் கூடியது.

2175. பா4 = காந்தி, ஒளி, பிரகாசம்.

2176. பா4க3: = பங்கு, பாகம், துண்டு, தலைவிதி, இடம்.

2177. பா4க3தே4யம் = பங்கு, பாகம், நற்காலம், நல் அதிருஷ்டம்.

2178. பா4க3வத: = விஷ்ணு பக்தன்.

2179. பா4க3வதம் = வியாசர் இயற்றிய 18 புராணங்களில் ஒன்று.

2180. பா4கீ3ரதீ = கங்கையின் ஒரு பெயர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *