2141. ப4க்தி: = பங்கு, அம்சம், சிரத்தை, பற்றுதல், பக்தி, நம்பிக்கை, தொண்டு, உபாசித்தல், அலங்கரிப்பு.
2142. ப4க3: = சூரியன், சந்திரன், அதிருஷ்டம், புகழ், அன்பு, அழகு, மேன்மை, சிறப்பு, தர்மம், ஒழுக்கம், முயற்சி, செயல், மோக்ஷம்.
2143. ப4க3வான் = கடவுள், தெய்வம், விஷ்ணு, சிவன்.
2144. ப4கி3னீ = ப4கி3னிகா = சகோதரி.
2145. ப4கி3னீய : = ப4க3நேய : = சகோதரியின் மகன்.
2146. ப4க்3ன = முறிந்த, குறைந்த, அழிந்த,தோற்றுப்போன.
2147. ப4ங்க3: = முறிதல், உடைதல், பிரிவு, பாகம், பங்கு, அழிவு, குறைவு, தீங்கு, வேதனை, தடை, நடை, அசைவு.
2148. ப4ங்கி3: = ப4ங்கீ3 = வெள்ளம், அலை, கபடம், அடி வைத்தல், அடி.
2149. ப4ஜனம் = சேவை, பூஜை, விரதம் பூணுதல், பங்கு பிரிதல்.
2150. ப4ஞ்ஜனம் = உடைதல், தடை செய்தல், துன்பம் விளைவித்தல், அழிதல், சேதம் உண்டாக்குதல், தோற்கடித்தல்.
2151. ப4ட: = போர் வீரன், வேலையாள், நாகரீகம் அற்றவன்.
2152. ப4ணதம் = ப4ணிதம் = ப4ணிதி: = பேச்சு, சம்பாஷணை, சொல்லுதல், சொற்பொழிவு.
2153. ப4த்3ரம் = மங்களகரம், ஆனந்தம், மகிழ்ச்சி, நல்அதிருஷ்டம்.
2154. ப4த்3ர: = எருது, ஒரு வகை யானை, சிவனின் பெயர்.
2155. ப4த்3ரா = பசு, கங்கையின் ஒரு பெயர், வளர்பிறை அல்லது தேய்பிறையில் த்விதீயை, த்வாதசி, சப்தமி திதிகளின் பொதுப் பெயர்.
2156. ப4யம் = பயம், நடுக்கம்.
2157. ப4யங்கர = ப4யானக = பயம் தரும், அச்சமூட்டும்.
2158. ப4யானக: = புலி, ராகுவின் பெயர், ஒரு காவியச் சுவையின் பெயர்.
2159. பரணீ = பரணீ நக்ஷத்திரம்.
2160. ப4ரத்3வாஜ: = வானம் பாடி.